வழக்கு விசாரணை Topeka, Kansas, USA 64-0621 1இந்த பிற்பகலில் ஒரு வேத வாசிப்பிற்காக மாற்கு புத்தகத்திலிருந்து, மாற்கு 16-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். நாம் தேவனுடைய வார்த்தையை வாசிக்கின்ற காரணத்தால் நீங்கள் உங்களுடைய வேதாகமங் களோடு எழும்பி நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மாற்கு 16 : 9 வது வசனத்திலிருந்து துவங்குவோம். வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தி யிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுது கொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்ட பொழுது நம்பவில்லை. அதன்பின்பு இரண்டு பேர் ......... அவர்களுக்கு மறுரூபமாய் தரிசனமானார். என்னை மன்னிக்கவும்) அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. அதன்பின்பு பதினொருவரும் போஜன பந்தியி லிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த் தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பா மற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 2அது இன்றைய ஒரு காட்சியில்லையா! நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சாட்சியாய் இருப்பதை அவர்கள் நம்புகிறதில்லை . பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலக மெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவ னோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். அது ஒரு பக்கத்தில் அல்லது மற்றொரு பக்கத்தில் எல்லைக் கோட்டை உண்டாக்குகிறது. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன : என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்து வார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப் படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப்போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங் களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 3கர்த்தாவே, இதுவே சபைக்கான கடைசி கட்டளை யாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். வார்த்தை மாம்சமாகி எங்களுக்குள்ளே வாசம்பண்ணிற்று என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எந்த மனிதனும் தன்னுடைய வார்த்தையைக் காட்டிலும் மேலானவனல்ல என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகையால் இந்த வார்த்தையாய் நீர் இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கி றோம். இது நீரே என்றும், இது நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருக்கிறது என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். ஓ, பிதாவாகிய தேவனே வார்த்தையின் ரூபத்தில் இன்றைக்கு எங்களிடம் வாரும்; நீரே உயர்த் தெழுந்த கிறிஸ்து என்பதையும், இந்தக் கடைசி நாளில் வெளிப் படுத்தப்பட்ட வார்த்தையாய் நீர் இருப்பீர் என்று நீர் உரைத்திருந்த ரூபத்திலேயே எழுந்தருளினதை ஜனங்கள் காணட்டும். நீர் பூமியின் மேலிருந்தபோது, நீர் தீர்க்க தரிசனமாய் உரைக்கப்பட்டிருந்த வார்த்தையாயும், மானிட ரூபத்தில் வெளிப்பட்டவராயுமிருந்தீர். இந்த நாளுக்கான வார்த்தை தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசுவே இன்றைக்கு வார்த்தையை, அதையே எங்களுக்குக் கொண்டு வாரும். நாங்கள், “சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்தது மாயிருக்கிற சந்தோஷத்தை” பெற்றுக்கொள்ளும்படியான வார்த்தையின் உம்முடைய வியாக்கியானத்தையே தாரும். நாங்கள் உம்மை இரம்மியமான அளவில் கண்டறிந்துள்ளோம், உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை என்பதையும், எங்கள் இருதயங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந் துள்ளோம். நாங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக் குட்பட்டிருக்கிறோம். நாங்கள் யாவரும் ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்திலிருந்து பிறந்திருக்கிறோம். அது தொடாதபடிக்கு தடை செய்யப்பட்டிருந்தது. ஏனென்றால் ஸ்திரீயானவள், அவளுக்குள் ஜீவன் இல்லை; அவள் முட்டையாய் மட்டுமே இருக்கிறாள். ஜீவன் மனிதனிடத்திலிருந்தே வந்தது, அது கிறிஸ்துவாயிருந்தது. நாங்கள் ஸ்திரீயினிடத்திலிருந்து பிறந்திருக் கிறோம், வேதம் கூறுகிறது போலவே, “வாழ்நாள் குறுகினவர் களாயும், சஞ்சலம் நிறைந்தவர்களுமாய் இருக்கிறோம். 4பிதாவே நாங்களும் கூட ஜீவனைத் தருகிற மனித னிடத்திலிருந்தே பிறந்திருக்கிறோம். ஆண் பெண்ணிடத்தில் சேருகிற போது, வித்து ஆணிடமிருந்தே வருகிறது; உம்முடைய ஆவி கன்னியின் மீது நிழலிட்டபடியால், அவளில் இரத்த அணு சிருஷ்டிக்கப்பட்டது; யூத இரத்த அணுவல்ல, புறஜாதி இரத்த அணுவுமல்ல, தேவனே இரத்தத்தை சிருஷ்டித்தார். நாங்கள் அந்த இரத்தத்திலே எங்களுடைய நம்பிக்கைகளை வைத்திருக்கிறோம். அது ஒரு ஸ்திரீயினுடையதுமல்ல, ஆணினுடையதுமல்ல, அது தேவனுடையதாய் இருந்தது. ஆகையால் கர்த்தாவே, நாங்கள் பெண் - மரத்தில் பங்குள்ளவர்களாய் இருக்கிறதை காண்கிறபடியால், நாங்கள் யாவரும் மரிக்க வேண்டும். ஏனெனில் ஸ்திரீயினிடத்தில் ஜீவன் இல்லை, இப்பொழுதும் கூட பிதாவே, கிறிஸ்து வாயிருந்த ஆண் - மரத்தில் பங்குள்ளவர்களா வதற்கான சிலாக்கியம் எங்களுக்கு அருளப்பட்டிருக்கிற படியால் இன்றைக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது அவர் மூலமாய் நாங்கள் ஜீவனை, ஜீவனை, வார்த்தையைப் பெற்றிருக்கிறோம். அது எங்கள் மத்தியில் ஜீவனை உண்டாக்கியிருக்கிறது. கர்த்தாவே, இந்தக் காரியங்கள் சபைக்கு அத்தகைய ஒரு உயிர்த்தோற்றமாகவும், அவர்கள் அதைக் காணவும், நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தை நாங்கள் புரிந்து கொள்ளவும் செய்யும். 8. சுகவீனமானவர்களையும், அவதியுறுவோரையும் குணப் படுத்தும். இந்த பிற்பகலில் இந்த ஆராதனை முடிவடை கின்றபோது, எங்கள் மத்தியில் ஒரு நபரும் பலவீனராய் இல்லாதிருப்பார்களாக. இது ஜனங்கள் மத்தியில் நீண்ட காலமாக நினைவுகூரப்படுவதாக! உம்முடைய ஊழியக் காரர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள், அவர்களுடைய சபைகள் முற்றிலுமாய் மாற்றமடைந்து, மகத்தான ஆராதனைகள் நடைபெறவும், இந்த பட்டணத்தி லேயே அவர்களுக்கு மத்தியில் இங்கு பண்டைய எழுப்புதல் துவங்கவும், அது மாநிலத்தையும், தேசத்தையும் மற்றும் உலகளாவிய அளவிலும் கூட வேகமாய் பரவும்படியாக அவர்கள் அவ்வளவாய் ஆவியில் ஏவப்படுவார்களாக. கர்த்தாவே இதை அருளும். நீர் உம்முடைய கரத்திலேயே இந்த ஜெப திறவுகோல்களை பற்றிக்கொள்ளும். எங்களுக்கு சகாயஞ்செய்யும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 5தேவன் பூமியின் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரவேண்டும். தேவன் இங்கு ஏதோ ஒன்றை, ஒரு நியமத்தை உடையவராயிருந்து, அதைக் கொண்டே உலகத்தை நியாயந் தீர்க்க, தேவனுக்குள் உலகத்தை நியாயந் தீர்க்க வேண்டிய வராய் இருக்கிறார், இல்லையென்றால் அது அநீதியானதாய் இருக்கும். உலகமோ நியாயந்தீர்க்கும்படியான எந்த நியமத்தையுமே அறிந்திருக்கவில்லை. அது உண்மையென்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? சபையானது நிலையான தாய் உள்ளதென்றால், அது எந்த ஒன்று? வார்த்தை , தேவன் இயேசுவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பதாகக் கூறினார். அவர் வார்த்தையாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்,'' ”நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.'' 6இப்பொழுது நான் இந்த பிற்பகலில் உங்களிடத்தில் ஒரு விநோதமான பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். அது உங்களுக்கு விநோதமாய் இருக்கலாம். ஆனால் நான் இந்தப் பொருளில் நம்முடைய ஆண்டவருக்கு ஒரு-ஒரு விசாரணையை வழங்கப் போகிறேன். அவர் பிலாத்துவி னுடைய நீதிமன்றத்தில் சரியான விதமான ஒரு விசாரணை யை உடையவராயிருந்தார் என்று நான் கருதவில்லை. அவருக்கு - அவருக்கு சரியான வழக்கு விசாரணை இருந்தது என்று நான் - நான் நம்பவில்லை. ஆகையால் அவர்கள் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடித்து, அவரை ஆக்கினைக் குட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தனர். ஆனால் இந்த பிற்பகலில் இது வழக்கு விசாரணையாய் உள்ள படியால், நாம் நடிக்கப் போகிறோம். நீங்களோ, ''நீர் அவருக்கு ஒரு விசாரணையை கொடுக்கக்கூடுமோ?'' என்கிறீர்கள். அவர் இன்னமும் வார்த்தையாய் இருந்தால், நாம் அவருக்கு அந்த வழக்கை அளிக்க முடியும், ஏனென்றால் அவர் இன்னமும் வார்த்தையாய் இருக்கிறார். நாம் அவருக்கு ஒரு வழக்கு விசாரணையை வழங்க முடியும். நாம் இந்த கட்டிடத்தை நீதிமன்றமாக உருப்படுத்திக் காட்டுகின்றபடியால், இந்த பிற்பகலில் நாம் அதை இந்த நீதிமன்றத் திலேயே காண விரும்புகிறோம். அதாவது அவர் ஒரு விசாரணையை, அதாவது அதை அவருக்கானதாகவோ, அல்லது அவருக்கு எதிரானதாகவோ பெற்றுக் கொள்கிறதை நாம் காண விரும்புகிறோம். நாம் இரண்டு தரப்பிலுமே வாய்ப்பளிக்க விரும்புகிறோம். ஆகையால் இந்த வழக்கில் நான் வார்த்தையாயிருக்கின்ற அவரை சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். 7இப்பொழுது நான் வாசித்துள்ள இந்த வேத வாக்கியத்தை, மாற்கு 16-ம் அதிகாரத்தை, பண்டிதர் ஸ்கோபீல்டும் கூட இங்கே, “பண்டைய இரண்டு மூல பிரதிகளிலுமே 9-ம் வசனத்திலிருந்து காணப்படவில்லை ” என்று கூறுகிறார். அது பொதுவாக, ஜனங்களுக்குள்ளே விசுவாசிக்கப் படுகின்றது. அதாவது நம்முடைய போதகர்களும் இன்றைக்கு அதை அந்த விதமாகவே விசுவாசிக்க விரும்புகின்றனர். அது அங்கு வாடிகனால் உட்புகுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரேனியஸ் மற்றும் பண்டைய எழுத்தாளர்கள் அநேகரால் மாற்கு 16 குறிப்பிடப்படுகிறதை நான் கண்டறிகிறேன். சரித்திரத்தை ஆய்ந்து படிக்கின்ற மற்ற ஜனங்களாகிய நீங்களும் வேதாகம சரித்திரத்தில் அவைகள் ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்தது என்பதை அறிவீர்கள். இயேசுவினுடைய மரணத்திற்கு பிறகும்கூட பாலிகார்ப், இரேனியஸ், பரிசுத்த மார்டின், பரிசுத்த கொலம்பா மற்றும் அவர்கள் அனைவருமே இந்த மாற்கு 16-ஐ குறிப்பிட்டுக் கூறியிருந்தனர். எனவே அது அதிகாரப் பூர்வமான தாய் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதனை ஒருபோதும் குறிப்பிட்டிருந்திருக்கவே மாட்டார்கள். சரித்திரத்தின்படி பரிசுத்த யோவானே நிருபங்களை ஒன்று சேர்த்து வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி யாக்கினார். பாலிகார்ப் அவருக்கு ஒரு நெருங்கிய நண்பனாய் இருந்து அதைச் செய்ய உதவினார். 8இப்பொழுது இன்றைக்கு அவர்கள் அதை விசுவாசிக்கிறதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்கள் உண்மையாயிருக்கின்ற தேவனுடைய உண்மை நிலையிலிருந்து விலகிச் செல்ல முயன்று கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு உறுதிமொழியை அல்லது ஒரு கோட்பாட்டை பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையான தேவன், இந்த அதிகாரத்தில் அது இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு வேண்டியதாயிருக்கக்கூடிய ஒவ்வொரு நிரூபணத்தையும் நிரூபிப்பார். சூடான் ஊழியக் குழுக்களின் தலைவர் பாரிஸ் ரீட்ஹெட் (Reedheed) ஒரு குறிப்பிடத்தக்க பெரிய போதகரைப் போன்றுள்ளவர். அவர் என்னுடைய இடத்திற்கு வந்தபோது, என்னுடைய மனைவி அப்பொழுது அங்கிருந்தாள். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீ ஒரு பாப்டிஸ்டாய் இருந்தீர் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்றார். நான், “ஆம் ஐயா, அது உண்மை ” என்றேன். 16. அவர், “நல்லது” என்று கூறி, “நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன்” என்றார். அவர், “நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, எனக்கு ஒரு அனுபவம் உண்டாயிருந்தது. என்னுடைய தாயார் என்னைப் பள்ளிக்கு அனுப்ப கழுவி மற்றும் ஒவ்வொன்றையும் செய்தாள் அப்பொழுது நான் என்னுடைய இளங்கலை பட்டத்தைப் பெற்றபோது, நான் நிச்சயமாகவே கிறிஸ்துவை கண்டடைவேன் என்று எண்ணினேன்” என்றார். அவர், “அது, அது எனக்கு வழங்கப்பட்ட போது, நான் அதை கண்டடையவில்லை. நான் என்னுடைய வேத பாண்டியத்திய பட்டத்தைப் பெற்றபோது, நான் அதைக் கண்டடைவேன் என்று நினைத்தேன். நான் என்னுடைய L.L.D. பட்டத்தைப் பெற்றபோது, நான் அதைக் கண்டடைவேன் என்று நினைத்தேன்” என்றார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் போதுமான பட்டங்களை, முறையான வேதபாட பட்டங்களையும், உயர் மதிப்பு வாய்ந்த பட்டங்களையும், அதாவது அவைகளை உங்களுடைய சுவற்றில் ஒட்டக்கூடிய அளவிற்கு பெற்றுவிட்டேன். ஆனால் ”வேதாகமத்தின் தேவன் எங்கே?'' என்று கேட்டார். அவர், ''போதகர்கள் தவறானவர்களாக இருந்தனரா?'' என்று கேட்டார். அதற்கு நான், “போதகர்கள் தவறானவர்கள் என்று கூறுவதற்கு நான் யார்?'' என்றேன். 9அவர், “நல்லது இதனால்தான் நீர் பெந்தெகோஸ்தே யினரிடத்திற்கு திரும்பி விட்டீர் என்பதை நான் புரிந்து கொண்டேன்'' என்றார். நான், “நல்லது, நான் அப்படி கூறவில்லை ....... நான் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிறந்த பொழுதே, நான் தானாகவே பெந்தேகொஸ்தேவாக இருந்தேன் என்று நம்புகிறேன்'' என்றேன். நான், ”காரணம் பெந்தெகோஸ்தே ஒரு ஸ்தாபனம் அல்ல. அவர்கள் அதை அவ்விதமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அது அதுவல்ல. தேவன் ஒரு பிரஸ் பிடேரியனை, லூத்தரனை அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் நிரப்புவார். பாருங்கள், எனவே அது ஒரு ஸ்தாபனமாயில்லாமல் அனுபவமாய் இருக்கிறது. நீங்கள் அதை ஸ்தாபனமாக்க முடியாது. அது ஒரு அனுபவம்“ என்றேன். அவர், “நல்லது, என்ன நேர்ந்தது என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்'' என்றார். அவர், ”இந்நாட்களில் அவர்கள் இந்தியாவிலிருந்து ஜனங்களை அவர்களுடைய படிப்பிற்காக அனுப்பிக் கொண்டிருக் கிறார்கள்'' என்றார். மேலும், “எங்களுடைய பள்ளியில் அங்கு ஒரு அருமையான தியப் பையன் வந்திருந்தான். அவன் தன்னுடைய படிப்பையும் முடித்து விட்டிருந்தான். அவன் திரும்பிச் சென்றபோது ........'' என்றார். நான் நினைக்கிறேன், அவன் மின் ஆற்றலுக்குரிய பொறியாளர் அல்லது ஏதோ ஒன்றாய் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர், ”ஆனால் நாங்கள் ........'' என்றார். 10சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அங்கே ஒரு பள்ளியை வைத்திருப்பதைப் போன்றே அவர்களும் வைத்திருந்தனர். அவர்கள் பொறியியல் மற்றும் என்னவெல்லாமோ கற்பித்தனர். எனவே அவர், “திரும்பும் வழியில் நான் மற்றொரு ஊழியக்காரரோடு அவனிடம் கூறினேன், இப்பொழுது இந்தியாவிற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறாயே ....'' என்றாராம். இந்தியர்கள் முகமதுவை ஆராதிப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர், ”நீ ஏன் உங்களுடைய மரித்துப் போன பண்டைய தீர்க்கதரிசியை மறந்துவிட்டு, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது? உன்னுடைய ஜனங்களுக்குச் சொல்ல, உன்னோடு ஒரு உண்மையான தேவனை இந்தியாவிற்கு திரும்ப எடுத்துச் செல்லக்கூடாதா?“ என்று கேட்டாராம். அவன், “ஐயா” என்றானாம். அவன், “என்னுடைய தீர்க்கதரிசி செய்யக்கூடியதைக் காட்டிலும் உங்களுடைய கர்த்தராகிய இயேசு எனக்காக என்ன செய்யக்கூடும்?'' என்று கேட்டானாம். அவர், “நல்லது, என்னுடைய கர்த்தராகிய இயேசு உனக்கு நித்திய ஜீவனை அளிக்க முடியும். அது வார்த்தையில் உள்ள ஒரு வாக்குத்தத்தமாய் உள்ளது'' என்றாராம். அவன், “என்னுடைய தீர்க்கதரிசி முகமது அதே காரியத்தை தம்முடைய வார்த்தையில் வாக்களித்தார்'' என்றானாம். அவர், “நல்லது, நீங்கள் பாருங்கள்'' என்று கூறி, அவர், ”என்னுடைய கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப் பட்டிருக்கிறார். உங்கள் தீர்க்கதரிசி கல்லறையில் இருக்கிறாரே'' என்றாராம். அவன் , ''அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டாரா?'' என்று கூறி, “நீங்கள் அதை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிரூபிப்பதாக கூறி வருகிறீர்கள், ஆனால் அதைக் குறித்து உலகத்தில் எண்பது சதவீதம் கூட கேள்விப் படவில்லையே'' என்றானாம். மேலும் அவன், ”முகமது மரித்தோரிலிருந்து எழும்பட்டும், அப்பொழுது அதை முழு உலகமும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளேயே அறிந்து கொள்ளும்'' என்றானாம். 11இப்பொழுது, அவர், “நல்லது, கவனி'' என்று கூறி, அவர், ”இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறார்'' என்றாராம். மேலும், அந்த கிறிஸ்தவர், “நான் அதை நிரூபிக்க முடியும், ஏனென்றால் அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார்'' என்றானாம். அந்த முகமதியனோ , “ஐயா முகமதுவும் என் இருதயத்தில் ஜீவிக்கிறார்” என்றானாம். அவர், “ஆனால் நீ பார், நாங்கள் வல்லமையையும், சந்தோஷத்தையும் பெற்றுள்ளோம்” என்றாராம். அவன், “ஐயா முகமதிய மார்க்கமும் கிறிஸ்தவ மார்க்கத்தைப் போன்றே மனோதத்துவத்தை தோற்றுவிக்க முடியும்'' என்றானாம். அது உண்மை . அவர்கள் வீதியில் படுத்துக்கொண்டு, “அல்லா” என்று சத்தமிடுவதையும் நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்குள்ளாகும்போது, அவர்களால் முடிந்தளவு .......... ஒரு மனிதன் ஒரு பட்டயத்தை தன்னுடைய இருதயத்திற்கு கீழே ஊடுரு விடும் படி குத்திக் கொள்வதையும், பின்னர் ஒரு மருத்துவர் அங்கு எழும்பி நின்று அதனூடாக தண்ணீரை ஊற்ற அது வெளியே வருவதையும், பின்னர் அந்த பட்டயம் வெளி யே இழுக்கப்பட, அது அவனை ஒன்றுமே காயப்படுத்தாததை நானும் பில்லியும் நின்று கவனித்தோம். பாருங்கள், அவர்கள் மரச்சிராய்வுகளை (Splinters) எடுத்துக்கொண்டு, தங்களுடைய விரல் நகங்களுக்கு கீழே எடுத்து அவைகளை சொருகிக் கொள்வதையும், தங்களுடைய மூக்கினூடாக சொருகி மாட்டிக்கொள்வதையும், அது எந்த உணர்வையும் ஏற்படுத்தாமலும், அல்லது ஒரு சொட்டு இரத்தக்கசிவும் உண்டாகாமல் உள்ளது. கிறிஸ்தவ மார்க்கத்தைக் காட்டிலும் அவர்கள் அதிகமான மனோதத்துவத்தை தோற்றுவிக்க முடியும். திரு. ரீட்ஹெட் என்னிடம் கூறினார், அதாவது, “நான் ஏதோ ஒன்றுமறிந்திராத பையனிடம் பேசிக்கொண்டிருக்க வில்லை என்பதை அறிந்து கொண்டேன்” என்றார். அவன், “முகமதியர்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றானாம். 12. அவர்கள் நம் முடைய தீரமான சகோதரர் பில்லிகிரஹாமிற்கு செய்தது போன்றேயுள்ளது, நீங்கள் அதை செய்தித்தாளில் வாசித்திருப்பீர்கள். அந்த முகமதியன் திரு. கிரஹாமிடம் வந்தபோது, “நீர் சுகவீனமா யிருக்கிற முப்பது ஜனங்களை எடுத்துக் கொள்ளும், நானும் சுகவீனமாயுள்ள முப்பது ஜனங்களை எடுத்துக் கொள்வேன்; நீர் உம்முடைய முப்பது பேரை சுகப்படுத்தும், நான் முகமதுவினால் என்னுடைய முப்பது பேரை சுகப்படுத்துவேன்'' என்றானாம், பாருங்கள், திரு. கிரஹாம் காட்சியிலிருந்து ஓடிவிட்டார். அவர் அவனுக்கு பதில் அளிக்கவில்லை . நான் அதை செய்திருப்பேன் என்று நான் நம்ப வில்லை. ஆனால் நான் எபிரேயப் பிள்ளைகளைப் போல, ''எங்கள் தேவன் எங்களை இதிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார்'' என்று இருந்திருப்பேன். ஏன் அவர் ஓரல் ராபட்ஸையோ அல்லது வேறு யாரையோ அழைத் தனுப்பியிருக்கக்கூடாது? அவர் அதை விசுவாசியாதிருந்தால், அதை விசுவாசித்த யாரையாவது அழைத்து அனுப்பி யிருக்கலாம். ஆனால், நீங்கள் பாருங்கள், ஸ்தாபனங்களால், ஓ, அவர்கள் அப்பொழுதே அவரை வெளியே வீசிவிடுவர். அவர் செய்வதற்கான ஒரு வேலை உண்டு. 13எப்படியாயினும், அப்பொழுது அவன், “நாங்கள் இந்தியாவில் இருக்கும் பொழுது, பாருங்கள் நீங்கள் - கிறிஸ்தவர்களாகிய நீங்கள் இயேசுவானவர் நீங்கள் செய்வதாகக் கூறினதைச் செய்யுங்கள்'' என்று கூறி, மேலும், “அப்பொழுதே நாங்கள் உம்மை விசுவாசிப்போம்'' என்றானாம். அவன், ”அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததாக அவர் கூறினார், எனவே அவர் செய்த அதே கிரியைகளை நீங்கள் செய்யும் காரணத்தால் ஜனங்கள் அதை அறிந்து கொள்வார்கள்'' என்றானாம். “நல்லது'' அவர், ”நாங்கள் பெரிய கிரியைகளைச் செய்கிறோம்'' என்றாராம். அவன், “நான் 'பெரிய' கிரியைகளை என்று ஒரு போது ம் கூறவில்லை . முதலில் அவர் செய்த கிரியைகளை யே நான் சற்று காண விரும்புகிறேன்'' என்றானாம். ஏன்? நீங்கள் பேசும் பொழுது, நீங்கள் ஏதோ மூலையில் உள்ள சிறு நபரிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிடத்தில் பேசுகிற பொழுது உங்களுடைய வேத சாஸ்திரத்தையே பேசுகிறீர்கள். எனவே அவன், ”அவர் செய்த கிரியைகளை நாங்கள் காண விரும்புகிறோம்'' என்றான். அவர், “ஓ”, “ஒருவேளை நீர் மாற்கு 16ஐ குறிப்பிட்டு கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டாராம். அவன், “ஆம் ஐயா. அது அவைகளில் ஒன்றாயிற்றே. சபைக்கான அவருடைய கடைசி கட்டளையாயிற்றே'' என்றானாம். அவர், “நல்லது, இப்பொழுது நீங்கள் பாருங்கள்'' என்று கூறி, ”அநேக ஜனங்கள் அந்த அதிகாரத்தை மூட மதாபிமானமாக விசுவாசிக்கின்றனர்'' என்றாராம். மேலும் அவர், “ஆனால் நாங்கள் அந்த மாற்கு 16ம் அதிகாரத்தில் 9 வது வசனத்திலிருந்து இருப்பவையெல்லாம் உண்மை யிலேயே ஆவியினால் ஏவப்படவில்லை என்பதை சிறந்த வேதப் பண்டிதர்களைக் கொண்டு பள்ளிகளில் கற்றறிந்து கொண்டோம்'' என்றாராம். அவன், “திரு. ரெட்ஹெட் அவர்களே அது ஏனோ!'' என்றானாம். அவன், ”அப்படியானால் எந்தப் பகுதிதான் ஆவியினால் ஏவப்பட்டிருக்கிறது?'' என்று கேட்டானாம். மேலும் அவன், “ஒருக்கால் அதில் எஞ்சியவைகளும் ஆவியில் ஏவப்படாதிருக்கலாம். ஆனால் குரான் முழுவதுமே ஆவியினால் ஏவப்பட்டுள்ளது. நீங்கள் வேதாகமம் என்றழைக்கப்படுவதில் எந்தவிதமான ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றானாம். 39. அவர், ”நான் வந்து உன்னிடம் பேசவிருக்கிறேன் என்று என் இருதயத்தில் தீர்மானம் செய்திருக்கிறேன். ஆம், நான் உன்னிடம் பேசப் போவதாக இருக்கிறேன்'' என்றாராம். அங்குதான் காரியம். இது ஆவியினால் ஏவப்பட வில்லையானால், அப்பொழுது அதன் எஞ்சியுள்ளதைக் குறித்தது என்ன? 14அது சிக்காகோவில் உள்ள ஒரு பெண்மணியையே எனக்கு நினைப்பூட்டுகிறது. அவளுடைய பையன் ஒரு ஊழியக்காரனாக இருப்பதற்காக பயில் ஏதோ ஒரு வேதாகம பள்ளிக்கு, வேத பாடசாலைக்கு, ஒரு வேத பாடசாலைக்கு தூரமாய் சென்று விட்டிருந்தான். அவன் தொலைவில் இருந்தபோது, அந்த வயோதிப தாயாருக்கு உண்மையிலே மிகவும் மோசமான சுகவீனம் ஏற்பட்டுவிட்டது. எனவே அவர்கள் இப்படிப்பட்ட ஒரு கடுமையான காய்ச்சலோடு உள்ள அவனுடைய தாயாரின் அருகில் இருக்கும்படியாக அந்தப் பையனுக்கு தகவல் அனுப்பினர். அவளுக்கு சீத சன்னியாய் இருந்தது. எனவே அது ஒரு அவசர அழைப்பாய் கூறப்பட்டிருக்கலாம். எனவே அந்தப் பையன் தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு ஆயத்தமானான். முடிவாக அடுத்த நாள், ஆனால் அந்த இரவு முழுவதுமே அவன் ஒரு செய்தியும் கேள்விப்படவே யில்லை, ஆனால் அடுத்த நாள், “எல்லாம் குணமடைந்து விட்டது'' என்று கூறப்பட்டது. ஆகையால் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, அவன் ஏதோ ஒரு பெரிய வேத பள்ளியின் போதனையோடு கிழக்கில் உள்ள பாடசாலையிலிருந்து திரும்பி வந்தான். அவன் வீட்டிற்கு வந்தான், அவன் தன்னுடைய விலையேறப் பெற்ற தாயை வாழ்த்திவிட்டு, அவன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவன், “அம்மா, உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை கேட்டறிந்து கொள்ள எனக்கு தருணமே கிடைக்கவில்லை '' என்றான். மேலும், ”ஓர் இரவு அவர்கள் என்னிடம் தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, அடுத்த நாள் காலை நீங்கள் சுகமாயிருக்கிறீர்கள் என்று கூறினர்“ என்றான். எனவே, ”மருத்துவர் எந்த மருந்தை உபயோகித்தார்?'' என்று கேட்டான். அதற்கு, “தேனே , மருத்துவர் ஒன்றையுமே உபயோகிக்கவில்லை'' என்றாள். அவன், “நல்லது, உங்களுக்கு அது எப்படி சுகமானது?'' என்று கேட்டான். “அங்கே நூறு அடி சதுர இடத்திலே அந்த கரண வளைவில் இருக்கும் ...... அந்த சிறு ஊழியக்குழுவைத்தான் உனக்குத் தெரியுமே” என்றாள். | “ஆம்” “அங்கு ஒரு பெண்மணி இருந்தாள். ஓர் இரவு இந்த சிறிய குழுவில் இருந்த அந்த ஏழ்மையான, தாழ்மையான கூட்ட ஜனங்கள், அங்கே அவர்கள் ஒரு ஜெபக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்'' என்றாள். மேலும் தொடர்ந்து, ”அவர்களில் ஒருவர் ஆவியினால் ஏவப்பட்டு இங்கு வந்து என்னைக் கண்டார். பின்னர் இரண்டு ஸ்திரீகள் வந்து, அவர்கள் எனக்காக எண்ணெய் பூசி ஜெபிக்க தங்களுடைய போதகரை அழைத்து வரலாமா என்று அவர்கள் என்னிடம் கேட்டனர்'' என்று கூறி, “தங்களுடைய கரங்களை என்மீது வைக்க, நான் சுகமடைவேன் என்றும் கூறினார்'' என்றாள். எனவே, ”உனக்குத் தெரியுமா, நானோ 'நிச்சயமாய் அழைத்து வாருங்கள்' என்றே கூறினேன். அவர்கள் போதகரை அழைத்து வர, அவர் தன்னுடைய கரங்களை என்மேல் வைத்து ஜெபித்தார்'' என்றாள். மேலும் “தேனே, அவர் வேதத்திலிருந்து மாற்கு 16-ம் அதிகாரத்தில், 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன' என்பதை வாசித்தார்'' என்றாள். அடுத்தபடியாக, “ என்னவென்று உனக்குத் தெரியுமா? அடுத்த நாள் காலை வைத்தியரே மிகவும் குழப்பமடைந்து விட்டார், என்ன செய்வதென்றே தெரியாமற்போயிற்று. எனக்கு காய்ச்சலே இல்லாமற்போயிற்று” என்றாள். 15“ஓ” அவன், ''அம்மா , நீ அந்த குழுவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடாது, ஆனாலும் நீ தொடர்பு வைத்து விட்டாயா?'' என்றான். அவன் தொடர்ந்து, “பாருங்கள்” என்று கூறி, நாங்கள் பள்ளியில் இருந்தபோது, மாற்கு 16-ம் அதிகாரத்தில் 9வது வசனத்திலிருந்து ஆவியினால் ஏவப்பட வில்லை என்பதை நாங்கள் கற்றறிந்து கொண்டோம்'' என்றான். அவளோ, “தேவனுக்கு மகிமை!'' என்றாள் “ஏன்?” அவன், “அம்மா, நீங்கள் அந்த ஜனங்களைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டீர்கள்'' என்றான். அவள், “நான் ஏதோ காரியத்தை அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்'' என்றாள். மேலும், ”நான் வேதாகமம் முழுவதையும் வாசித்துக் கொண்டு வருகிறேன், அதில் மற்ற இடங்களில் உள்ள மற்ற வாக்குத்தத்தங்களும் கூட அதற்கு ஒத்ததாகவே உள்ளது'' என்றாள். அவள் தொடர்ந்து, ''ஆவியினால் ஏவப்படாததைக் கொண்டு தேவனால் என்னைக் குணப்படுத்த முடிந்ததென்றால், உண்மையிலேயே ஆவியினால் ஏவப்பட்டதைக் கொண்டு அவர் என்ன செய்வார் என்றே நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்“ என்றாள். அது உண்மை. எனக்கு அது முழுவதுமே ஆவியில் ஏவப்பட்டதாகும். தேவனே, அதை விசுவாசிக்கும்படி எனக்கு விசுவாசத்தைத் தந்து அதை உறுதிப்படுத்தியருளுமே! இப்பொழுது நாம் அப்படியே ஒரு நீதி மன்ற வழக்கிற்காக ஒரு சில நிமிடங்கள் இப்பொழுது மாற்றிக் கொள்ளப் போகிறோம். இப்பொழுது நினைவிருக்கட்டும், நாம் இயேசுவை கொண்டு வருவதற்காக ஒரு நீதிமன்ற அறைக்குச் சென்று கொண்டிருக்கிறோம், தேவனே இங்கு காட்சியில் இருக்க, நாம் அவருக்கு ஒரு நியாயமான விசாரணையை கொடுக்கிறோம். அப்பொழுது அவர் வார்த்தையாய் இருந்தது போன்றே, அவர் இன்னமும் இந்நாளிலும் கூட வார்த்தையாகவே இருக்கிறார். (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?) [சபையோர், “ஆமென்'' என்கின்றனர் - ஆசி.] 16இப் பொழுது இந்த வழக்கில், தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தங்கள் உலகத்திற்கு எதிரானது என்பதே இதனுடைய வழக்காடும் பொருளாய் உள்ளது. இப்பொழுது உண்மையிலேயே சரியான முறையில் புரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் அதை ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டீர்கள். இந்த குற்றச்சாட்டிற்கான வழக்காடும் பொருள், “தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறதில்லை'' என்ற வாக்குத்தத்தத்தின் பிளவாய் உள்ளது. அது ஒரு வாக்குத்தத்தத்தின் பிளவாய் உள்ளது. அது என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். 17இப்பொழுது, நாம் குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரே எப்பொழுதும் நிலைமையை வகுத்துரைக்க வேண்டியவராய் இருக்கிறார் என்பதை கண்டறிந்துள்ளோம், குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரே, அது சரியென்று நான் நம்புகிறேன். இங்கு ஒரு வழக்குரைஞர் அமர்ந்திருந்தால் நலமாயிருக்கும், நான் இதை சரியாக அமைத்துள்ளேன் என்று நம்புகிறேன். குற்றஞ் சாட்டும் வழக்குரைஞரே நிலைமையை வகுத்துரைக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் தேவனுடைய வார்த்தையை குற்றஞ் சாட்டுகின்ற குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் பிசாசாய் இருக்கிறான். இந்த வார்த்தையின் பிரதி வாதி (Defendent) தேவனாகவே இருக்கிறார். ஏனென்றால் அவர் வார்த்தையாய் இருக்கிறார். இந்த வழக்கில் பிரதிவாதி பக்கத்து வாத விளக்கச் சாட்சி (Defense witness) பரிசுத்த ஆவியாய் இருக்கிறார். இங்கே இந்த பிற்பகலில் குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரும் சில சாட்சிகளை வைத்திருக்கிறார். அந்த சாட்சிகளில், அவர் களில் ஒருவர் திரு. அவிசுவாசியாய் (Mr. Unbeliever) உள்ளார். அடுத்த ஒருவர் திரு. ஐயுறவாதியாய் (Mr. Skeptic) உள்ளார், அடுத்த ஒருவர் திரு. பொறுமையற்றவராய் (Mr. Impatient) உள்ளார். அவர்கள் மேடைக்கு கொண்டுவரப்பட்டு, ஆணையிடுவிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுவர். 18இப்பொழுது நீங்கள் நீதிமன்றத்தின் அமைப்பை புரிந்து கொண்டீர்கள், தேவன் உலகத்தால் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கின்றார், ஏனென்றால், “அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள் கிறதில்லை யாம்'' குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் நிலைமையை எடுத்துரைக்கிறார், அது உலகத்தைச் சுட்டிக்காட்டுகிறது. குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் பிசாசாய் இருக்கிறான், அவன் வார்த்தை உண்மையான து என் பதை மறுதலிக்கிறான். குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் தேவனுடைய வார்த்தைக்கு எதிரான தன்னுடைய சாட்சிகளாக மூன்று சாட்சிகளைக் கொண்டு வருகிறார். இந்த பிற்பகலில், “தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளுகிற தில்லை. அதில் இடையிட்டு மாற்றம் உண்டுபண்ண வேண்டியதில்லை. அது உண்மையானதல்ல, அதைக் குறித்த ஒன்றுமே உண்மையில்லை” என்பதை அவன் உங்களுக்கு நிரூபிக்க, அதை நிரூபிக்கப் போகிறானாம். பிரதிவாதி தேவனே, அவரே இந் நாளுக்கான வார்த்தையாயும், ஆக்கியோனாயும், அந்த நாளில் அல்லது மற்றெந்த நாளிலும் இருந்ததைப் போன்று மாறாதவராய் இருக்கிறார். குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் தன்னுடைய சாட்சிகளை வைத்திருக்கிறார். 19இப்பொழுது நீங்கள், “முடிவைத் தீர்மானிக்கும் குழுவினர் (Jury ) எங்கே ?'' என்கிறீர்கள். நான் அவர்களிடத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் முடிவைத் தீர்மானிக்கும் குழுவினர், நீங்களே நீதிபதியாயுங்கூட இருக்கிறீர்கள். இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்களே இந்த வழக்கின் பேரிலான முடிவை தீர்மானிக்கும் குழுவினராயும், நீதிபதியுமாயிருக்கிறீர்கள். நான் வெறுமனே சார்புரிமை பேச்சாளனாய் உள்ளேன். இப்பொழுது நாம் நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்தி விட்டோம். இப்பொழுது குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரால் உத்தரவிடப்படுகிறது. இந்த பிற்பகலில் ஒரு பலப்பரீட்சைக்கு இந்த வழக்கைக் கொண்டுவரும்படி நீதிமன்ற அறையில் உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. இப்பொழுது அநேக ஜனங்கள் உங்களிடத்தில், “தேவனுடைய வார்த்தை நம்பக்கூடியதாக இல்லை. நீங்கள் அதன் பேரில் சார்ந்திருக்க முடியாது” என்று கூறியுள்ளனர். என இவ் விதமாய் இவை யாவற்றையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நாம் அதை ஒரு உண்மையான வழக்கு விசாரணைக்கு கொண்டு வருவோமாக. எத்தனை பேர் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “இயேசு கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார் என்பதை ஒரு நியாயமான வழக்கு விசாரணையில் புரிந்து கொள்ளும்படி நான் கேட்க விரும்புகிறேன்” என்று கூற வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கின்றீர்கள்? இந்த பிற்பகல் நம்முடைய நீதி மன்றத்தில் நாம் அவருக்கு ஒரு நியாயமான வழக்கு விசாரணையை அளிக்கப் போகிறோம். சத்துரு அப்படியே சத்துருவினுடைய வார்த்தைகளை எடுத்துக் கொள்ளட்டும். அவன் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், அது உண்மையானதா என்பதை பார்ப்போம். நாம் இந்த பிற்பகலில், இயேசு கிறிஸ்துவே வார்த்தை என்பதை இந்த நியாயமான வழக்கு விசாரணையில் ஆராய்ந்து அளிப்போம். 20இப்பொழுது பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற் காக குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர், வழக்கு மன்ற நிலைக் கூண்டிற்கு ........ வழக்கு மன்ற நிலைக் கூண்டிற்கு கொண்டு வரவேண்டிய முதல் சாட்சி திரு. அவிசுவாசி அவர்களாய் இருக்கிறார். அவர் சாட்சி கூறும்படியான வழக்குமன்ற நிலைக்கூண்டில் ஏறுகிறார். இப்பொழுது திரு. அவிசுவாசி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கதா பாத்திரங்களை தவறவிட வேண்டாம், இல்லை யென்றால் நீங்கள் உங்களுடைய சுகத்தை இழந்துவிடும் படியாக, நீங்கள் ஏதோ ஒன்றை தவற விட்டுவிடுவீர்கள். திரு. அவிசுவாசி அவர்கள் சாட்சி கூறும்படியான உறுதிமொழியை எடுக்க வருகிறார். அவருடைய குற்றச் சாட்டு, “தேவனுடைய வாக்குத்தத்தங்கள் யாவுமே உண்மையானவை அல்ல. அது உண்மையானதல்ல” என்பதேயாகும். பரிசுத்த ஆவியானவரின் கூட்டம் என்றழைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் மாற்கு 16-ல் உள்ளவை அவருக்கு ஆதரவாய் எடுத்துரைக்கப்பட்டன என்று அவர் வாதிடுகிறார். சில வருடங்களாகவே அவருக்கு வயிற்றுத் தொல்லை இருந்து கொண்டிருந்ததாம். எனவே அவர், “பரிசுத்த ஆவியானவரின் கூட்டம்'' என்று அவர்கள் அழைக்கிற, அவர்கள் இருந்த ஒரு இடத்திற்கே சென்று, இந்த மாற்கு 16-ன் வாக்குத் தத்தம் உண்மையானது என்றே விசுவாசித்துக் கொண்டிருந் தாராம். தேவனுடைய வாக்குத் தத்தத்தின்படியே அவர் மேல் கரங்களை வைப்பதை அவர் ஏற்றுக் கொண்டாராம். 21அவர் ஊழியக்காரருக்கு எதிராக கூறுவதற்கு ஒன்றுமில்லையாம்; அவர் வார்த்தையிலிருந்தே அதை வாசிக்கிறாராம். அவர் ஊழியக்காரரை குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கவில்லை; அவர் தேவனை குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். அது ஊழியக்காரனுடைய தவறில்லை யாம். ஏனெனில் ஊழியக்காரன் தேவன் என்ன செய்யும் படி கூறினாரோ அதை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கி றானாம். தேவன் உண்மையாகவே மாற்கு 16- ல், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன : அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் தங்களுடைய கைகளை வைப்பார்களேயானால், அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். அவர் ஒரு விசுவாசி என்று அவர் கூறுகிறார், எனவே அவர் மாற்கு 16 உண்மையாயிருக்க வேண்டும் என்று அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்த அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு அவர் வந்தாராம். அப்பொழுது ஊழியத்திற்கென்று அனுப்பப்பட்ட ஒரு ஊழியக்காக ஒரு விசுவாசி என்று உரிமை கொண்டாடப்பட்ட ஊழியக்காரர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால், அவர் தன்னுடைய கரங்களை இவர் மீது வைத்தாராம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருந்ததை விட அவருடைய வயிறு அவ்வளவு மோசமாகி விட்டதாம். ஆகையால் அது உண்மையில்லாததாய் இருக்கும் பொழுது, வார்த்தையில் அப்படிப்பட்டதொரு, காரியம் எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர் வாதிடுகிறார். இப்பொழுது அவர் கீழே இறங்கட்டும். அவர் சாட்சி கூறிவிட்டார். 22அடுத்து நிற்க வேண்டியவர் திரு. ஐயுறவாதியாய் இருக்கிறார். அவர் ஒரு சாட்சி கொடுக்க விரும்புகிறார். திரு. ஐயுறுவாதி சுமார் பதினைந்து வருடங்களாகவே ஷயரோகத்தினால் அவதியுற்றுக் கொண்டிருந்தார் என்று அவர் கூறுகிறார். ஆனால் அது அவருக்கு இன்னமும் நின்று விடாமல், அது சற்று விட்டு விட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். அவர் சற்று நலமாய் இருப்பாராம். பின்னர் தொடர்ந்து அவதியுறுவாராம். அவர் பட்டிணத்தின் ஒரு இடத்தைக் குறித்தும், அங்கு ஒரு தேவ பக்தியான பிரசங்கியார் என்று கருதப்பட்டவரையுங் குறித்து கேள்விப்பட்டாராம். ஜனங்களோ தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி சுகமடைவதாக வலியுறுத்திக் கொண்டிருந்தனராம். அது யாக்கோபு 5 : 14ல் காணப்படுகிறது. அங்கு தேவனுடைய வார்த்தையில் அது, “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்'' என்கிறது. அவர் வியாதியாய் இருக்கையில், ஒரு விசுவாசி என்ற வகையில், அவர் ஜனங்கள் இந்த தேவ பக்தியான போதகரால் சுகமாக்கப்பட்டிருக்கின்றனர் என்று அவர்கள் உரிமை கோருகிற இந்த கூட்டத்திற்கு செல்கிறார். யாக்கோபு 5:14ன்படி அவருக்கு உதவி செய்யப்பட்டதாம். போதகரோ வார்த்தையின் படியே ஊழியம் செய்து, இவருக்கு எண்ணெய் பூசி, இவருக்காக ஜெபித்தார். போதகர் கூறின “விசுவாசமுள்ள ஜெபமாகவே' அந்த ஜெபம் இருந்தபடியால் இவர் விசுவாசித்தாராம். அது ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்பு நடைபெற்றதாம். அதிலிருந்து ஒரு பதிலையும் இவர் பெற்றக்கொள்ளவே இல்லையாம். ஆகையால் திரு. ஐயுறவாதி அவர்கள் வேதத்தில் அப்படியொரு வாக்குத்தத்தம் இருந்து, அதற்குப் பின்னே தேவன் செயல்படாதபடியால் அவர் அநீதியுள்ள தேவன் என்று வாதிடுகிறார். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், நான் இங்கே முழு சுவிசேஷ வாக்குத்தத்தங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். 23இப்பொழுது அடுத்த சாட்சி வழக்கு மன்ற நிலைக்கூண்டிற்கு வரலாம். குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் தன்னுடைய வழக்கை ஆதாரப்பூர்வமாய் உறுதிசெய்யும் முன்னர் தன்னுடைய அடுத்த சாட்சியை அழைக்கிறார். அவருடைய அடுத்த சாட்சி திரு. பொறுமையற்றவர் என்பவராய் உள்ளார். இப்பொழுது இவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட குண நலன்கள் குடிகொண்டிருக்கிற கதாபாத்திரங்களாய் உள் ள னர். பாருங்கள், இப் பொழுது அவர்கள் கூறுகிறார்கள். எனவே திரு. பொறுமையற்றவர் வருகிறார். அவர் ஒருநாள் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தார் என்றே அவர் உரிமையாய் வலியுறுத்திக் கூறுகிறார். அவர் சபைகளுக்குச் சென்றதில்லையாம். ஆனால் அவர் .... அவர் ஒரு விசுவாசியாய் இருந்தாராம். எனவே அவர்களில் ஒருவர் ஒரு சுவிசேஷகரிடத்தில் சென்றாராம். மற்றொருவன் ஒரு போதகரிடம் சென்றாராம். இந்த நபரோ வெறுமனே வீட்டில் தரித்திருந்த ஒரு இரகசிய விசுவாசியாய் இருந்தாராம். அவர் போய் மாற்கு 11-ம் அதிகாரத்தில் 22 மற்றும் 23ம் வசனங்களை வாசித்துக் கொண்டிருந்தாராம். நீங்கள் அந்த வேத வாக்கியங்களை கீழே எழுதிக் கொண்டால் நலமாயிருக்கும். அங்கே இயேசு தாமே தேவனாய் இருப்பதாக உரிமை கோரி, இம்மானுவேல் தன்னுடைய சொந்த உதடுகளினால், “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து : பெயர்ந்து போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்ற இந்த வாக்குமூலத்தை உண்டு பண்ணினார். மேலும் அவர், “நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அது உங்களுக்கு கொடுக்கப்படும்” என்றும் கூட கூறினார். 24அவர் ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக தன் கால் முடமாயிருந்து கொண்டிருந்ததாக கூறுகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அறையில் அமர்ந்து, அவர் விசு வாசித்ததாக உரிமை கோருகிற வார்த்தையை விசுவாசிக்கும்படி ஆவியினால் ஏவப்பட்டதை உணர்ந்து, தன் முழு இருதயத்தோடு அவர் அதை விசுவாசித்தாராம். அப்பொழுது அவர் தன்னுடைய சொந்த சத்தத்தினால், “என் கால்களிலுள்ள முடமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்னை விட்டு நீங்கிப்போ'' என்றாராம். இது ஐந்து வருடங்களுக்கு முன்பு சம்பவித்ததாம், ஆனாலும் அவர் முன்பிருந்ததைப் போலவே முடவராகவே இருந்து கொண்டிருக்கிறாராம். ஆகையினால் திரு. பொறுமையற்றவர் தன்னுடைய சாட்சியை, வார்த்தை பிழையற்றதாய் உள்ளது என்பதற்கு எதிராக எடுத்துரைக்க விரும்புகிறார். அதனை வேதாகமம் ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தையாய் உள்ளது என்பதற்கு எதிராக எடுத்துரைக்க விரும்புகிறார். இந்த வாக்குத்தத்தம் உண்மையல்லவென்றும், அவர் அதனை சோதித்துப் பார்த்திருப்பதாகவும், ''அது உண்மையாயிருக்கவில்லை யென்றும்'' என்றும் கூறுகிறார். திரு. ஐயுறுவாதி அதை சோதித்துப் பார்த்ததாகவும், “அது உண்மையானதல்ல'' என்றும் அவர் கூறினார். திரு. அவிசுவாசி அதை சோதித்து பார்த்ததாகவும் அது உண்மையானது அல்ல என்று கூறி, இந்த மூன்று சாட்சிகளுமே வேத வாசிப்புகளையும், வேத பிரகாரமான வாக்குத்தத்தங்களையும் அருளி, இந்த வாக்குத்தத்தம் இதை பொருட்படுத்துகிறது என்று கூறுகிறது. நீங்கள் அதை வேதத்திலிருந்து வாசிக்க முடியும். அவர்கள், ”அது உண்மையானதல்ல'' என்பதற்கு சாட்சிகளாய் உள்ளனர். ஆகையால் வேதா க ம ம் வீசியெறியப்பட வேண்டிய தாய் உள்ள து. ஏ னெனில் அதன் ஒரு பகுதியாகிலும், அதன் ஒரு வசனமாகிலும் நம்பப்படத் தக்கதாக இருக்க முடியாது. என்னால் அதில் எதையுமே நம்ப முடியாமற் போயிற்று. அது முழுவதும் சத்தியமாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் ஒன்றுமே சத்தியமாய் இருக்காது. ஒரு சங்கிலி அதனுடைய பலவீனமான இணைப்பில் மட்டுமே சிறப்பாய் இருக்கிறது. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 25இப்பொழுது குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் குற்றச் சாட்டையும், வழக்கையும் உறுதிப்படுத்த மேலே வருகிறார். அவர் அதை உறுதிப்படுத்த விரும்புகிறார். இப்பொழுது அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனியுங்கள் , “தம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகளை அவர்களுடைய விசுவாசத்தினால் சோதிப்பதற்காக தேவனுடைய வார்த்தை யில் உள்ள இப்படிப்பட்ட கண்மூடித்தனமான வாக்குத்தத் தங்களினால் தேவன் உண்மையானவர் என மெய்ப்பிக்கப் படவில்லையாம். ஏனென்றால் அவைகள் உண்மையான வைகள் அல்ல''. தேவன் தம்முடைய வார்த்தையில் சத்தியமாயிருக்கும்படி வாக்குத்தத்தம் பண்ணியிருக்கின்ற இந்த வார்த்தையை நிரூபிக்க இவர் இங்கே சாட்சிகளை உடையவராயிருக்கிறாராம். இவர் வைத்துள்ள சாட்சிகள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் சுகவீனமாய் இருந்து வருகின்றனர். அவர்கள் இந்தவிதமாய் இருந்து வருகின்றனர். அவர்கள் அந்தவிதமாய் இருந்து வருகின்றனர் என்பதை சாட்சியின் மூலமும், மருத்துவர்களின் விளக்கச் சான்று மூலமும் காண்பிக்க முடியும். ”அவர்கள் ஆவியில் ஏவப்பட்ட வேத வாக்கியங்கள் என்று கருதப்பட வேண்டிய இந்த தெய்வீக மானதை ஏற்றுக் கொண்டிருந்து, அவைகளை சோதித்துப் பார்க்க, அவைகள் உண்மையான வைகளாய் இருக்கவில்லை ''. அவர், “இந்த வார்த்தைகள் உண்மையானவைகள் அல்ல, ஏனென்றால் அவர் அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் அப்பொழுது தவறிப்போய் விட்டார்' என்பதை நிரூபிக்க சாட்சிகளை வைத்திருக்கிறார். 26இப்பொழுது, இப்பொழுது மீண்டுமாய் கவனியுங்கள். “அவர் தவறிப்போய் விட்டார். தேவன் தம்முடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, சரியாக அவர் கூறிய படியே கடைப்பிடித்துச் சென்ற இந்த விசுவாசிகளை குணப்படுத்த தவறிவிட்டார். ஆகையால் தேவன் தம்முடைய வாக்குத் தத்தத்தை குறித்த வகையில் ஏதாவது காரியத்தைச் செய்ய ஒரு விரலையும் ஒருபோதும் அசைக்கவேயில்லை . வருடங் களோ கடந்து விட்டன''. அப்படியானால், அவர், ''விசுவாசமுள்ள வனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்' என்ற ஞானஸ்நானம் பண்ணப் படுதலைப் போன்ற மற்ற வேத வாக்கியங்களைக் குறித்து என்ன? அப்படியானால் யாருமே இரட்சிக்கப்பட்டிருக்க வில்லை. அவர் திரும்பவும் வருவார் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த வேத வாக்கியங்களைக் குறித்து என்ன? அவைகளில் ஒன்றும் உண்மையானதல்ல. காரணம் இவைகள் உண்மையானவைகளாக இல்லாதபடியால் அதுவும் உண்மையானதல்ல. அது ஒரு கற்பனைக்குரிய புத்தகமாகவே உள்ளது. இந்த மனிதர்களோ விசுவாசிகளாய் இருக்கின்றனர். ஆயினும் அவர், தேவனோ, 'விசுவாசி களுக்கு வாக்குத்தத்தங்களும், எல்லா காரியங்களும் கூடும்' என்கிறார். ஆனால் இவர்களோ விசுவாசிகள்” என்றார். 27அதே சமயத்தில் அவர் தம்முடைய சிலுவையேற்றத் திற்குப் பின்னர் மீண்டும் உயிரோடிருப்பதாக உரிமை கோருகிறார். வேதம், 'அவர் மரித்தோரிலிருந்து எழுந்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே நிலைத்திருக்கிறார்...' என்று கூறுகிறது. ஆனால் இந்த மனிதனை அவருடைய கரங்களில் ஆணிகள் அறைந்த வடுக்களோடு சபையின் மத்தியில் நடப்பதை ஒருவரும் கண்டதேயில்லை. எபிரெயர் 13 : 8 அவ்வண்ணமாய் இருக்கவில்லை. அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாத வராயிருக்கவில்லை . காரணம் அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராய் ஒருபோதும் இருந்ததில்லை அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்கிறதில்லை என்பதை இவர் இந்த சாட்சிகளைக் கொண்டு நிரூபித்திருக்கிறார். எனவே இந்தப் புத்தகம் குப்பைத்தொட்டிக்குள்ளாக வீசியெறியப்பட்டு, அதைக் குறித்து மறந்து விட வேண்டிய தாயுள்ளது. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது''. 28இப்பொழுது நினைவிருக்கட்டும், நான் குற்றஞ் சாட்டும் வழக்குரைஞர் பாணியை உபயோகித்துக் கொண்டு, அவருடைய வழக்கை உறுதி செய்து கொண்டிருக்கிறேன். “சரி, அவர் லூக்கா 17 : 30ல் கூறினார், அங்கு அவர், 'கடைசி நாட்களில் மனுஷகுமாரன் வெளிப்படுவார்', தேவன் ஆபிரகாமின் வித்திற்கு தம்மை வெளிப்படுத்துவார்'' என்று கூறினார் என்பதை அவர் ஒருமுறை ஒரு மதவெறி கொண்ட பிரசங்கியார், அவர் மனுஷகுமாரன் என்றழைக்கப்படுகிற மானிட சரீரத்தில் தம்மை மீண்டுமாய் வெளிப்படுத்துவார் என்று பிரசங்கித்ததை கேட்டாராம். “வெளிப்படுத்தின விசேஷம் 10, அவர் உரிமை கோரின கடைசி தூதனுடைய செய்தியாளன், வெதுவெதுப் பாய் இருந்த லவோதிக்கேயாவிலுள்ள சபை காலத்தின் படியே, இயேசுவானவர் (வார்த்தையானவர்) சபைக்கு வெளியே தள்ளப்பட்டார் என்று அவர் கூறுகிறார். ஆரம்ப நாட்களில் சீர்திருத்தக்காரர்களுக்கு இந்த யுகங்களில் வெளிப்படுத்தப்படாமலிருந்த காரியங்கள் இந்த கடைசி நாட்களில், அதாவது, முடிவில், ஏழாம் தூதனுடைய, ஏழாம் செய்தியாளனுடைய செய்தியில், இந்த எல்லா வேத வாக்கியங்களும் உண்மையாக்கப்பட்டு, வெளிப்படுத்தப்படும் என்று அவர் உரிமை கோரினார். அப்படிப்பட்ட ஒரு நபர் பூமியின் மேல் இல்லை , அப்படி இருந்ததும் இல்லை , இருக்கப்போவதுமில்லை” என்று அவர் வாதிடுகிறார். 29அவர், ''தேவன் தம்முடைய வேதாகமத்தில், சபையானது சம்பிரதாயமாயும், தூரமாய் வழி விலகிச் சென்று விடும் என்றும், மல்கியா 4-ல் அவர் மீண்டும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார் என்றும், அவர் ஏற்கனவே எலியாவையும், யோவான் ஸ்நானகனையும் அனுப்பியுள்ள தாகவும் அதில் அவர் வாதிடுகிறார். அவர் ஒரு தீர்க்க தரிசியை அனுப்புவார் ....... அவன் எலியாவின் வல்லமை யுடையவனாய் இருப்பான். அவனுடைய ஊழியமும், அவனுடைய செய்கைகளும், ஒவ்வொரு காரியமும் எலியாவைப் போன்றே இருக்கும். ஆகையால் அவனுடைய ஊழியத்தில், அவன் ஜனங்களை இந்த சம்பிரதாயமான நிலையிலிருந்து அழைத்து, அப்போஸ்தல பிதாக்களின் அசலான கலப்படமில்லாத விசுவாசத்திற்கு திருப்புவான் '' என்றார். ஆனால் அப்படிப்பட்ட காரியமே நிகழ்ந்து கொண்டிருக்க வில்லை. “வான மும் பூமியும் ஒழிந்து போம், ஆனால் அவருடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்றும் கூட அவர் உரிமை கோருகிறார்''. ஆனால் அது தவறுகிறது. என்பதை காண்பிக்க இந்த பிற்பகல் இங்கே விளக்கச் சான்றை வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். ”மரித்தோரி லிருந்து எழுந்த இந்த இயேசு யார்? நீங்கள் யாவரும் ஒரு கூட்ட புத்திக்கோளாறான மனோதத்துவ கூட்டத்தாரிடம் கிரியை செய்துள்ளீர்கள். அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நீங்கள் ஒரு போலியான நம்பிக்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.'' இப்பொழுது, அவருக்காக கூற அதுவே கிட்டத்தட்ட போதுமானது என்று நான் கருதுகிறேன். அவர் முழு வேதாகமத்தையுமே அதில் எடுத்துக் கொண்டார் என்று நான் கருதுகிறேன். இப்பொழுது குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர், அவர் அமரட்டும். இப்பொழுது குற்றஞ் சாட்டும் வழக்குரைஞருடைய சாட்சிகளும் கூட கீழே இறங்கட்டும். அவர்கள் வழக்குமன்ற நிலைக்கூண்டிலிருந்து கீழே இறங்குகின்றனர். 30இப்பொழுது நாங்கள் மேடையின் மேல், பிரதிவாதி பக்கத்து வாத விளக்கமாகிய பரிசுத்த ஆவியானவரை அழைக்கிறோம். அவர் பேசுவதற்கு வருகிறார். குற்றஞ் சாட்டும் வழக்குரைஞர் தன்னுடைய வழக்கை வேத வாக்கியத்துடன் உறுதி செய்துள்ள விதத்தை நீங்கள் கண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சியாக பரிசுத்த ஆவியானவர் பிரதிவாதியின் வார்த்தையை எதிர்த்து வழக்காட வருகிறார். அவர்கள் மேலான ஒன்றையும் வைத்திருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். முதலில் அவர் இந்த நீதிமன்றத்தை கவனத்திற்கு அழைத்து, குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தையின் வியாக்கினியாய், தேவனுடைய வார்த்தையை ஏவாளுக்கு வியாக்கியானித்த அதே வியாக்கி யானியாய் உள்ளார் என்றும், அந்த வியாக்கியானி ஏ வாளுடைய வியாக்கியானி என்பதையும், அதில் வெறுமனே ஒரு வார்த்தையைத் தவிர அதில் உள்ள ஒவ்வொரு துணுக்கும் சரியானது என்று கூறுகிறார் என்பதையும் நீதிமன்றம் புரிந்து கொள்ளும்படி அவர் விரும்புகிறார். அவர் நீங்களும் கூட அறிந்து கொள்ள ....... விரும்புகிறார் .......... அவர் ஒருவரே வேதாகமத்தை எழுதினவர் என்பது நினைவிருக்கட்டும். ஆதியிலே தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு வார்த்தையை விலக்கின தே எல்லா மரணத்திற்கும், துக்கத்திற்கும், வியாதிக்கும் காரணமானது என்பதை நீங்களும் கூட அறிந்து கொள்ளும்படி அவர் விரும்புகிறார். தேவனும் கூட தம்முடைய வார்த்தையில், கடைசி அதிகாரத்தில், முதலில் கூறினது போலவே, “யாராகிலும் இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் அல்லது இதனோடு எதையாகிலும் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்தலிருந்து எடுக்கப்படும்'' என்று கூறினதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி அவர் விரும்புகிறார். அது வார்த்தையாய் இருக்க வேண்டும், அது மட்டுமே. அவர் இவை யாவையும் விடா முயற்சியுடன் இப்பொழுது உறுதி செய்திருப்பது ஏவாளுடைய வியாக்கியானியே என்பதை நீதிமன்றம் அறிந்து கொள்ளும்படி விரும்புகிறார். 31அவர் உங்களிடம் விரும்புவது இந்த ....... இந்த நீதிமன்றத்தினுடைய கவனத்தை மீண்டுமாய் அழைத்து, இது, எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சி, அவர் இந்த நீதி மன்றத்தை அழைத்து, வாக்குத்தத்தங்கள் விசுவாசிகளுக்கு மட்டுமேயன்றி, பாவனை விசுவாசிகளுக்கோ, பொறுமை யற்றவர்களுக்கோ அல்லது ஐயுறுவாதிகளுக்கோ அல்ல என்பதை காண்பிக்க விரும்புகிறார். அது காட்சியை மாற்றுகிறதல்லவா? அது வெறுமனே ...... விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஜனங்களுக்கு அல்ல; அது விசுவாசிகளுக்கு மாத்திரமே, அவர்கள் விசுவாசிகள் என்று கூறுகிறவர்களுக்கல்ல. சாத்தான், அவனும் கூட ஒரு விசுவாசி என்றே கூறிக்கொள்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அவர்களுக்கு அல்ல. அது உண்மையான விசுவாசிகளுக்கு மட்டுமேயாகும். இந்த எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சி யான வர் இந்த மனிதர்கள் விசுவாசிகளா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால், மொத்தத்தில் இந்த எதிர்வாத பக்கத்து வாத விளக்க சாட்சியானவர் தாமே வார்த்தையை உயிர்ப்பிக்கிற வராய் உள்ளார். நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா அல்லது இல்லையா என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதை நிறை வேறும்படி செய்ய அவரே தேவனால் அருளப்பட்டிருக்கிற ஒருவராய் இருக்கிறார். அல்லேலூயா! அதை நிரூபிக்கிற ஒருவர் அவரே. அதை நிறைவேறச் செய்கிற ஒருவர் அவரே. அவர் ஒருவரே அது சரியான இடத்தில் விழுந்துள்ளதா அல்லது இல்லையா என்பதை அறிகிறவர். இந்த எதிர் வாதி பக்கத்து வாத விளக்க சாட்சியானவர் வார்த்தைக்காகவே. கவனியுங்கள், அவர் விசுவாசிகளை மீண்டுமாய் அழைக்க விரும்புகிறார். எதிர்வாதி பக்கத்து விளக்க சாட்சியானவர் அது விழுந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அறிந்திருக்கிறார், அவரே வார்த்தையின் உயிர்ப்பிப்பாளராய் இருக்கிறார். 32அவர் மீண்டுமாய் நீதிமன்றத்தினுடைய கவனத்தை கேள்வியில் இருக்கிற வாக்குத்தத்தத்தின் வார்த்தைக்கு அழைக்கிறார். அவர் இந்தக் காரியங்கள் சம்பவிப்பதற்காக குறிப்பிட்ட எந்த நேரத்தையும் ஒருபோதும் நிர்ணயித்து வைக்கவேயில்லை. எப்படி அவர்கள் உங்களுக்கு வார்த்தையை தவறாய் வாசித்துக் காட்ட முடியும் என்பதை பாருங்கள் . இப்பொழுது இந்த விசித்திர மனிதர்கள், “நான் இது சம்பவிப்பதை காணட்டும்'' என்கிறார்கள். நீங்கள் பாருங்கள், அவர்கள் வார்த்தையை சரியாய் வாசிக்கிறதும் கூட இல்லை. அந்த மனிதன் ஒரு உண்மையான விசுவாசியாய் இருந்தால், அவன் இன்னமும் எந்த காலவரை யையும் ஒருபோதும் தீர்மானிக்கவே மாட்டான். அவர் இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது என் பதையும், இயேசு கிறி ஸ் து வார்த்தையாய் வெளிப்பட்டார் என்பதையும், மேலும், “வார்த்தையானது ஒரு விதை விதைத்தவனின் விதையாய் உள்ளது என்பதையும் கூட நீதிமன்றம் நினைவில் கொள்ளும்படி விரும்புகிறார். வித்தானது தானாக மட்டுமே உற்பத்தி செய்ய முடியும், அதனுடைய வாக்குத்தத்தத்தை உண்டு பண்ண முடியும் அது சரியான விதமான ஒரு நிலத்தில் இருந்தால், அது வித்தை உயிர்ப்பிக்கும். ஆமென். நாம் ஒருவிதமான வழக்கு மாற்றத்தில் இல்லையா? அது சரியான இடத்தில் இருக்க வேண்டும். 33இந்த சாய்வு மேஜையின் மேல் உள்ள ஒரு தானிய விதையானது ஒருபோதும் ஒரு அறுவடைக்கு வளர்ச்சி யடையாது. இங்கே மயில் துத்தத்தில் உள்ள ஒரு தானிய விதை ஒன்றுமே செய்யாது. ஒரு தானிய விதையானது அந்த தானிய விதைக்காக உர மூட்டப்பட்டிருக்கிற நிலத்திற்குள் விழுந்தாக வேண்டும். இல்லையென்றால் அது வளர்ச்சி அடையாது. தேவன் தம்முடைய வார்த்தையானது ஒரு விதை விதைப்பவன் விதைத்த ஒரு விதை என்றும், அது சரியான விதமான மண்ணில் விழவேண்டும் என்றும் கூறினார். அந்த மண் விசுவாசமாய் உள்ளது. அது ஒரு விதையாயுள்ளது. அது இந்த நிலத்திற்குள்ளாக விழவேண்டும். இல்லை யென்றால் அது உயிர்ப்பிக்கப்படமாட்டாது. வேறு வார்தைகளில் கூறினால், பரிசுத்த ஆவியானவர், எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சியானவர் இங்கே அது சரியான வகையான மண்ணில் விழும் வரைக்கம் அவர் அதனண்டையுங்கூட வரவும் முடியாது என்று கூறுகிறார். அவரே அதன் உயிர்ப்பாளராய் இருக்கிறார். எதிர்வாத பக்கத்து வாத விளக்க சாட்சியானவர் தன்னுடைய முதல் சாட்சியை அழைக்கிறார். 34குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் இங்கே பூமியின் மேல் சாட்சிகளை அழைத்து, வார்த்தை தவறாயிருக்கிறது என்று அதை நிரூபிக்கிறார் என்றால், எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சியான வரும் அது உண்மையாயுள்ளது என்று நிரூபிக்கக்கூடிய சாட்சிகளை அழைக்க உரிமை உண்டு என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் வார்த்தையானது விருத்தியடைகின்ற காரணத்தால், இப்பொழுது உள்ள கேள்வி, வார்த்தையோடு விசுவாசிகளுக்கும் அவிசுவாசி களுக்கும் இடையேயானதாகும். எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சியானவர் இந்த நீதிமன்றத்தில் இந்த பிற்பகலில் முதல் சாட்சியாய் உள்ள நோவாவை அறிமுகப்படுத்த விரும்புகிறார். நோவா மிகவும் விஞ்ஞான சம்மந்தமான காலத்தில் வாழ்ந்தான் என்று அவன் கூறினான். நோவா சாட்சி பகர விரும்புகிறான். ஜனங்கள் அற்புதங்களிலிருந்தும், மற்ற காரியங்களிலிருந்தும் தூரமாய் விலகியிருந்த நாட்களில் அவன் ஜீவித்ததாக கூறினான். அப்பொழுது தேவனுடைய வார்த்தையானது, அவர் ஜலத்தினால் உலகத்தை அழிக்கப் போவதாகவும், ஜலமானது மேலிருந்து கீழே வரப் போவதாகவும் அவனிடத்தில் கூறினதை அவன் கேட்டான். அது மழையாய் பெய்யும். அதற்கு முன்பு அது அவ்வாறு பெய்ததே கிடையாது. ஆனால் தேவனுடைய வார்த்தை யானது, அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்த காரணத்தினால் வார்த்தை அவனிடத்தில் வந்தது என்று அவன் கூறுகிறான். எனவே அந்த வார்த்தை நிறைவேறப் போவதாயிருந்தது என்றும், ஏனென்றால் அது தேவனாய் இருந்தது என்றும் அவன் பிரசங்கிக்கச் சென்றான். அவன் திரு. அவிசுவாசி, திரு. ஐயுறுவாதி, திரு. பொறுமையற்றவர் அவனைத் தொடர்ந்து சோதித்தனர் என்பதையும் கூட இந்த நீதி மன்றம் அறிந்து கொள்ளும்படி அவன் விரும்புகிறான். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தபடியால், தேவன் பொய்யுரைத்திருக்க முடியாது என்று அறிந்து, அவன் எதையும் பொருட்படுத்தாமல் வார்த்தையைப் பற்றிக் கொண்டான். 35அவர்கள் அவனிடத்தில் வந்து, “இப்பொழுது, நோவா” என்றனர். திரு. அவிசுவாசி, “அங்கே மேலே மழை நீர் உள்ளது என்பதை நீ எப்படி நிரூபிக்கப் போகிறாய்?'' என்றான். “அது அங்கே உள்ளது என்பதை நான் அறியேன். ஆனால் தேவன் அவ்வண்ணமாய் உரைத்தபடியால் அதுஅது தீர்வுண்டாக்குகிறது. “அங்கே மேலே மழை நீரே இல்லாதிருக்கும்போது எப்படி மழை பெய்யப் போகிறது?'' “எனக்கு தெரியாது. ஆனால் தேவன் அவ்வண்ணமாய் கூறினார். அது அதனை தீர்க்கிறது.” திரு. ஐயுறுவாதி சுற்றி வந்து, “மழை கீழே பெய்யப் போகின்றது போன்று அப்படிப்பட்ட ஒரு காரியம் உண்டாகுமானால், அப்பொழுது அவர் இங்கே கீழே இறங்கி வந்து மழை நீரைச் சேகரித்து, அதை மேலே கொண்டு சென்றிருப்பார். அவர் அதை எப்படி செய்யப் போகிறார்?'' என்றார். “எனக்குத் தெரியாது'', ”நான் பேழையை கட்டின பிறகு ...'' 36அவன் இந்த வாக்குமூலத்தைக் கூறின போது, ஜனங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தபடியால், எல்லோரும் அவனைப் பார்த்து நகைத்து, “நான் மழையையே காணவில்லையே'' என்றனர் என்பதை அவன் முதலில் கூற விரும்புகிறான். நல்லது, அவன் பேழைக்கான வேலையைச் செய்ய சென்றபோதோ, அவர்கள், “ஒருக்கால் பேழையை கட்டின பிறகு ........ '' என்றனர். திரு - திரு. பொறுமையற்றவர் அவனிடம், ”ஒருக்கால் பேழையை கட்டி விட்ட பிறகு, அப்பொழுது மழை வரலாம்'' என்று கூற முயற்சித்தான். ஆனால் பேழை கட்டி முடிக்கப்பட்ட போதும், இன்னமும் மழை பெய்யாதிருந்தது. அடுத்த நாளும் மழை பெய்யவேயில்லை, அடுத்த வாரமும் மழையே பெய்யவில்லை. மழை பெய்யவே யில்லை, அடுத்த மாதமும் மழை பெய்யவேயில்லை, அடுத்த வருடமும் மழை பெய்யவேயில்லை. அவன் பேழையை கட்டி முடித்தபோதும் மழை பெய்யவேயில்லை. 37அப் பொழுது ஒரு நாள் தேவனுடைய சத்தம் அவனிடத்திற்கு திரும்பி வந்து, அவன் இயற்கையின் மத்தியில் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளத்தைக் காண்பான் என்றும், அது பறவைகள் மற்றும் விலங்குகள் இதற்குள்ளே செல்வதாய் இருக்கும் என்று அவனிடம் உரைத்ததை அவன் கூறினான். அப்பொழுது திரு. அவிசுவாசி அவனைப் பார்த்து நகைத்து, “இது பறவைகளின் உறைவிடமாயிற்று. அவன் பேழைக்குப் பதிலாக ஒரு கோழிக்கூண்டை கட்டிவிட்டான்” என்றார். எல்லோரும் அவனைக் குறித்து நகைத்து ஏளனம் செய்தனர். ஆனால் ஒருநாள் தேவன் அவனிடத்தில், “பேழைக்குள்ளாகச் செல்” என்றார். நோவா வாசலில் நின்று, “நீங்கள் உங்களுடைய கடைசி அழைப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளே வாருங்கள்!'' என்றான். அவனுடைய சொந்தக் குடும்பத்தினரைத் தவிர வேறு எவரும் உள்ளே வரவில்லை. எனவே அவன் பேழைக்குள் சென்றான் என்று அவன் கூறுகிறான். அவன் தன்னுடைய அன்பார்ந்த சிறு குடும்பத்தாரிடம் கூறினான், இப்பொழுது இது தீர்க்கதரிசி நோவாவாக உள்ளது. “ஓ, இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் சந்தேகமின்றி மழை பொழியும்.” அவன் உள்ளே சென்றபொழுது, கதவு இயற்கைக்கு மேம்பட்ட நிலையில் அவனுக்குப் பின்னே மூடிக் கொண்டது. அவன், தேனே, தன்னுடைய மனைவியிடமும், தன்னுடைய மரு மகள் களிடமும், தன்னுடைய மகன்களிடமும், “நீங்கள் பாருங்கள், இப்பொழுது தேனே, நாம் தேவனால் உள்ளே பூட்டப்பட்டிருக்கிறோம்” என்றான். 38“இப் பொழுது நாம் இங்கே ஒரு ஜன்னலை வைத்திருக்கிறோம். உண்மையிலே துரிதமாய் படிகளில் மே லே ஓடுங்கள். இதை தவற விடாதீர்கள் . உண்மையிலேயே துரிதமாய் மேலே ஓடி, இப்பொழுது இங்கே மேலே செல்லுங்கள். சந்தேகமின்றி மழை பெய்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.” அங்குள்ள ஜனங்களில் சிலர் அவன் பிரசங்கிப்பதைக் கேட்டு, “அந்த வயோதிப மூட மதாபிமானி சரியாய் இருக்கக்கூடுமோ என்றே வியக்கிறோம்'' என்றனர். திரு. அவிசுவாசி, திரு. ஐயுறுவாதி, திரு. பொறுமையற்றவர், அவர்கள் யாவரும் சுற்றி வந்து, ”நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்'' என்றனர். “நோவா, நீ அங்கே உள்ளே இருக்கிறாயா?'' என்றனர். “ஆம்” “திற, நாங்கள் சுற்றிப் பார்க்க விரும்புகிறோம்” “தேவன் கதவை அடைத்திருக்கிறார். நான் அதைத் திறக்க முடியாது. இங்கு உள் ளே திறக்கும்படி எந்த தாழ்ப்பாளும் கிடையாது.'' இப்பொழுது அவர்கள், “இந்த கிழ பைத்தியக்காரன், அவன் அங்கே உள்ளே சென்று அந்த கதவை மூடிக் கொண்டு, ....... நாம் நினைக்கும்படி முயற்சிக்கிறான் ....... அது ஒரு கேலிக்கூத்தாயிருக்கிறது. அவன் நம்மை கிலியூட்ட முயன்று கொண்டிருக்கிறான்'' என்றனர். 39குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரின் சாட்சிகள் இங்கே அமர்ந்து இவை யாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் அதைச் செய்கிற குற்றவாளிகளாய் உள்ளனர். வேதம், “பரியாசக்காரர்களே!'' என்ற வண்ணமாகக் கூறியுள்ளது. “அவர்கள் என்னை பரிகசித்தனர், என்னைக் குறித்து ஏளனம் செய்தனர்.'' ''நானும் கூட மழைக்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தேன். அங்கே நாள் முழுவதும் மழையே இல்லாதிருந்தது. அடுத்த நாளும் மழையே இல்லாதிருந்தது. அடுத்த நாளும் மழையே இல்லாதிருந்தது. நான்கு நாட்களாக மழையே இல்லை. ஐந்து நாட்களாக மழையே இல்லை. ஆறு நாட்களாக மழையே இல்லை. ஆனால் எப்பொழுது மழை பெய்யப்போகிறது என்று தேவன் என்னிடம் கூறவில்லை. அவர் வெறுமனே, “மழை பெய்யப் போகிறது'' என்றார். அவர் ஒரு போதும் எந்த காலவரையறையையும் நிர்ணயிக்கவேயில்லை. அவர் வெறுமனே, ”மழை பெய்யப் போகிறது“ என்றார். 40அவர், “நீங்கள் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைத்தவுடனே, அவர்கள் குதித்தெழுந்து, தரையில் ஓடப் போகிறார்கள்'' என்று ஐயுறுவாதி உங்களை நம்பச் செய்ய விரும்பினது போல ஒருபோதும் கூறவேயில்லை . அவர், ''அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். அவர் ஒருபோதும் எப்பொழுது, எப்படி என்று கூறவேயில்லை. ”அவர்கள் சொஸ்தமாவார்கள்!'' அவர், “யாக்கோபு 5: 14ல், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்” என்றார். எப்பொழுது? அவர் எப்பொழுது என்று கூறவில்லை. அவர் வெறுமனே அவனை இரட்சிக்கும் என்று கூறினார். மாற்கு 16-ல், அவர், “இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” என்றார். அவர் எப்பொழுது என்று கூறவில்லை . அவர் அது சம்பவிக்கும் என்று கூறினாரே! அல்லேலூயா! அந்த போலியான வார்த்தையின் வியாக்கியானியை அங்கே பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள், “நல்லது, நீர் இந்த மனிதனை குணப்படுத்த நான் காணட்டும், அவன் நெடுங்காலமாக சக்கர நாற்காலியில் இருந்து வருகிறான். நான் அதைக் காணட்டும். அவர் இவன் விசுவாசத்தை உடையவனாயிருக்கிறான் என்று கூறுகிறாரே!'' என்கிறீர்கள். அது பிசாசு! அவன் யார் என்று பார்த்தீர்களா? அவர்கள் குதித்தெழுந்து அப்பொழுது அதை பெற்றுக் கொள்வார்கள் என்று இயேசு ஒருபோதும் கூறவேயில்லை. அநேக பெந்தெகோஸ்தே ஜனங்கள் அதே காரியத்தை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதம் அதை ஒருபோதும் கூறவேயில்லை . அவர், “அவர்கள் அதை விசுவாசித் தால், அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். அவர் அதை நிரூபிக்க இங்கே தம்முடைய சாட்சிகளை வைத்திருக்கிறார். நோவா, “நூற்றிருபது வருடங்களுக்குப் பிறகு, அப்பொழுதே மழை பெய்தது'' என்றான். ஆனால் மழை பெய்தது. நோவா அதை தன்னுடைய தலைமுறையில் காணப்போவதாய் இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனென்றால் அவன் பேழையைக் கட்டி, அதற்குள்ளே செல்ல ஆயத்தமாயிருந்தான். இப்பொழுது, இப்பொழுது அது உண்மையாயிருந்தது என்பதை நாம் கண்டறிந்தோம். இப்பொழுது அந்த முதல் சாட்சி நோவாவினுடையதாய் இருக்கிறது. 41இப்பொழுது நாம் இரண்டாவது சாட்சியை மேலே அழைப்போம். நாம் ஆபிரகாமை மேலே அழைப்போம். அவன், “நான் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தேன். நான் தேவனுடைய ஆவியின் ஏவுதலின் கீழாய் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அவன் என் மனைவி அறுபத்தைந்து வயதுடையவளாயும், நான் எழுபத்தைந்து வயதுடையவனு மாயிருக்கையில், நான் ஒரு குழந்தையை சாராளின் மூலம் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று என்னிடம் கூறினார்'' என்றான். அதே சமயத்தில், நிச்சயமாகவே, அவள் ....... நான் மலட்டுத்தன்மையுடையவனாய் இருந்தேன்; அவள், அவளுடைய கர்ப்பம் மரித்துப் போயிருந்தது. அவளுக்கு ஸ்திரீகளுக்குரிய வழிபாடு நின்று இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் கடந்திருந்தன. நான் இத்தனை வருடங்களாக அவளுடன் வாழ்ந்திருந்தும் பிள்ளைகளுக்கான அடையாளமே இல்லாதிருந்தது. அவள், அவளுடைய கர்ப்பம் மரித்துப் போய் விட்டிருந்தது. ஆனால் தேவனோ, நான் ஒரு குழந்தையை அவள் மூலமாய் பெற்றுக் கொள்ளப்போவதாக என்னிடம் கூறினார். திரு. அவிசுவாசி, திரு. ஐயுறுவாதி, திரு. பொறுமை யற்றவர் முதல் இருபத்தி எட்டு நாட்கள் கடந்த பிறகு, சாராளுக்கு ஒன்றுமே சம்பவிக்காதிருக்கும்போது, அவர்கள் என்னை நகைத்து, என்னைக் குறித்து ஏளனம் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் வருடத்தில் அவர்கள் என்னிடத்தில் வந்து, “இப் பொழுது நீர் எத்தனை பிள்ளைகளை பெற்றிருக்கிறீர்?'' என்றனர். 42ஆனால் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, குழந்தையானது காட்சியில் . தோன்றினது. அது சம்பவித்தது. தேவன், “நீ அடுத்த வாரத்தில் ஒரு குழந்தையை சாராளின் மூலம் பெற்றுக் கொள்ளப் போகிறாய்'' என்று கூறவில்லை. அவர் ஒருபோதும் எந்த நேரத்தையும் நியமிக்கவேயில்லை. அவன் ஒரு குழந்தையை சாராளின் மூலம் பெற்றுக் கொள்வான் என்று அவர் கூறினார். அவர் எப்பொழுது என்பதை ஒருபோதும் கூறவேயில்லை. அவர் வெறுமனே அவன் பெற்றுக்கொள்வான் என்றே கூறினார். எனவே ஆபிரகாம், “நான் வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை. ஆனால் அதன் பேரில் தயக்கமடையாத காரணத்தால், நான் எல்லா நேரத்திலுமே பலமுள்ளவனாயிருந்தேன். விசுவாசத்தில் பலவீனமடை வதற்குப் பதிலாக காண்பதற்கு சரீரத்தில் பலவீனமடைந் திருந்தேன். அது பிறக்கிற பிள்ளையின் இடையூறுதலினால் அப்படியிருந்து, நான் விசுவாசத்தில் பலமுள்ளவனானேன், ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ள வல்லவராய் இருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன்” என்றான். “ஆகையால் ஒருநாள் நான் சாராளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் வந்தார். மூன்று மனிதர்கள், அவர்களில் இருவர் சோதோமிற்குச் சென்றனர்; ஒருவர் என் அருகில் நின்று, என்னிடத்தில் பேசி, சம்பவிக்கப் போவதாயிருந்த காரியங்களை என்னிடம் கூறினார். நான் வயோதிபனாயும், என்னுடைய தோள்பட்டை தொங்கினவனாயும் இருந்தேன். சாராளோ எழும்ப முடியாதவளாக இருந்தாள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அதற்கு அடுத்த நாளே என்னுடைய முதுகிலிருந்து கூன் நீங்கினதை நான் காணத் துவங்கினேன். என்னுடைய முடி கருப்பாக மாறத் துவங்கின து, சாராளுடைய கன்னங்களும் சிவந்து போய்விட்டன.'' 43இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, தீவிரவாத உணர்ச்சியாயுள்ளதே!'' எனலாம். அப்படியே ஒரு நிமிடம், அவர் அதைச் செய்தாரா என்பதைப் பாருங்கள். கவனியுங்கள், அவர்கள் வாலிப மனிதனும், வாலிப ஸ்திரீயுமாக மாறிவிட்டனர். இப்பொழுது நீங்கள், ”ஓ, சகோதரன் பிரான்ஹாமே!'' எனலாம். இப்பொழுது தேவன் தம்முடைய செய்தியை எழுத்தின் வரிகளுக்கு இடையே உள்ள பொருளில் மறைத்து வைக்கிறார். வேத பாடசாலை அதை ஒருபோதும் அறிந்து கொள்ளாது. அது உண்மை . இல்லவே இல்லை. அது ஒரு காதல் கதை. அங்கேயிருக்கின்ற என்னுடைய மனைவி, அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அவள் கடிதத்தில் ஒரு காரியத்தைக்கூறுகிறாள், ஆனால் என்னால் எழுத்தின் வரிகளுக் கிடையேயுள்ள அதன் பொருளை அறிந்து கொள்ள முடிகிறது. அவள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன், எனவே நான் அவளுடைய சுபாவத்தை அப்படியே அறிந்து கொள்கிறேன். அவள் என்ன குறிப்பிடுகிறாள் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். “இன்றிரவு பில்லி நான் இங்கு அமர்ந்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் படுக்கையில் இருக்கின்றனர். நான் உம்மைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.'' ஓ, நான் - நான் அவள் என்னத்தை குறிப்பிட்டு கூறிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறேன், பாருங்கள் பாருங்கள், ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன். நீங்கள் தேவனோடு அன்பு கொண்டிருந்தால், தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள்ளே இருந்தால், பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். 44கவனியுங்கள், இப்பொழுது அவர்கள் மிகவும் முதிர்ந்து போன வயதில் இருந்தனர். வேதம் அவ்வண்ணமாக கூறியுள்ளது. இப்பொழுது துரிதமாக நாம் முடிவிற்கு வருகிறோம். அப்பொழுது அவன், “நான் ஒரு வாலிப மனிதனாக மாறிவிட்டேன். அவள் ஒரு வாலிப ஸ்திரீயாக மாறிவிட்டாள்'' என்றான் நீங்கள், “ஓ, சகோதரன் பிரான் ஹாமே!'' எனலாம். கவனியுங்கள், அந்தப் பிள்ளையைப் பெற்றுக் கொள் வதற்கு ....... அவளுடைய கர்ப்பம் செத்துப் போய் விட்டிருந்தது; அவளுடைய ஜீவிய ஓட்டம் மரித்துப் போய் விட்டிருந்தது. இப்பொழுது பிறப்பிப்பதற்கு ....... அவர் அவளுக்கு மற்றொரு கர்ப்பத்தை உண்டாக்க வேண்டியதாய் இருந்திருக்கும். அவர் அதை செய்திருப்பாரா? அப்பொழுது தாய்மார்கள் எங்கும் சுற்றித்திரியும் படி பிள்ளையினுடைய வாயில் ஒட்டவைக்கும்படியான இந்த பால் புட்டிகளை அவர்கள் வைத்திருக்கவில்லை. அவர்களுடைய நாட்களில் தாயினிடத்திலேயே அது சுரக்க வேண்டியதாயிருந்தது. எனவே அப்படி செய்வதற்கான பால் சுரப்பிகள் உலர்ந்து போய் விட்டிருந்தன. எனவே குழந்தைக்கு ஊட்ட அவர் புதிதான பால் சுரப்பிகளை உண்டு பண்ண வேண்டியிருந்திருக்கும். மற்றொரு காரியம், நூறு வயது நிரம்பிய ஒரு ஸ்திரீக்கு இன்பம் உண்டாகுமோ? அவர் அவளுக்கு ஒரு புதிய இருதயத்தை உண்டாக்க வேண்டியிருந்திருக்கும். புரிகின்றதா? ஆகையால் அவர் அதன் மேல் ஒட்டுப் போடவில்லை. அவர் ஆபிரகாமுடைய வித்துக்கு என்ன செய்யப் போகிறார் என்றும், அவர்கள் மீண்டும் புதியவர்களாகி, நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிற குமாரனின் வருகையை ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு புதிய சரீரத்தைப் பெறுவதையும் அவர் அவனுக்குள் காண்பித்தார். நான் இன்னமும் வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறேன். நீங்களோ, “தீவிரவாத உணர்ச்சியே!” எனலாம். 45சரி, அப்படியே ஒரு நிமிடம். கவனியுங்கள், அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவர்கள் முந்நூறு மைல்கள் தூரத்தில் உள்ள பெலிஸ்திய தேசத்திற்கு, கேராருக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள். அங்கே அபிமெலேக்கு என்னும் பெயருடைய ஒரு வாலிப மனிதன் இருந்தான். அவன் இராஜாவாக இருந்தான். அவன் ஒரு இனிய இருதயம் கொண்ட பெண்ணை தேடிக்கொண் டிருந்தான். அங்கே அவர்கள் எல்லாருமே அழகான பெலிஸ்திய பெண்களாய் இருந்தனர். இதோ சிறிய பாட்டி, சாராள் இப்பொழுது தன்னுடைய சால்வையை மேலே போட்டுக் கொண்டு ஆபிரகாமோடு வருகிறாள். ஆபிரகாம், “அன்பே, நீ எனக்கு ஒரு தயை செய்யும்படி நான் விரும்புகிறேன்'' என்றான். தொடர்ந்து, ”நீ காண்பதற்கு மிகவும் அழகாயிருக்கிறாய், என வே அந்த இராஜா உன்னைக் காணும்போது, அவன் உன்னை மனைவியாக தெரிந்தெடுத்துக் கொள்வான்'' என்றான். ஜனங்கள் அவளைக் கண்டபோது, அவள் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாளே! பாட்டியா? அபிமெலேக்கு அவளை மனைவி யாக தெரிந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கு அவள் அவ்வளவு அழகாய் இருந்தாள். அப்பொழுது அவர் ஒரு சொப்பனத்தில் அபிமெலேக்கிடம் தோன்றி, ''அவளுடைய கணவன் என்னுடைய தீர்க்கதரிசி. நீ அவளைத் தொட்டாய், நீ செத்த மனிதனைப் போல இருக்கிறாய்“ என்றார். அது சரியா? அவர் ஆபிரகாமுடைய பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அங்கே காண்பித்துக் கொண்டிருக்கிறார். “அவர் எப்பொழுது அதைச் செய்வார் என்று கூறவில்லை, ஆனால் அவர் அதைச் செய்வார் என்றே அவர் கூறினார்.'' அது சரி, நண்பனே அப்படியே அதில் தொடர்ந்து சென்று பார்ப்போம். அவர் அதை எப்படியோ செய்வார். அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். இப்பொழுது, ஆனால் வாக்குத்தத்தத்தின் காலத்திலிருந்து இருபத்தைந்து வருடங்கள் கழித்து சாராள் பிள்ளையை உடையவளாயிருந்தாள். அவள் அதை எப்பொழுது பெற்றுக் கொள்வாள் என்று வார்த்தையானது ஒருபோதும் உரைக்கவில்லை, ஆனால் அவள் அதை பெற்றக் கொள்வாள் என்றே உரைத்தது. 46இப்பொழுது நாம் இந்த சாட்சிகளை துரிதப்படுத்து வோம். மூன்றாவது சாட்சி மோசே. அது அந்தக் காலத்துக்கான வார்த்தையாய் இருந்தது என்பதை நிரூபிக்கவும், செயல் படவும் தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார் என்று அவன் கூறினான். அவன் அந்த வார்த்தையை ஒரு அடையாளத்துடனும், ஒரு சத்தத்துடனும் ஏற்றுக்கொண்டு, போதகர் பார்வோனின் முன்பு சென்றான். போதகர் பார்வோனோ, “ஹு, அது ஒரு மலிவான மந்திரக் காரனின் ஜாலவித்தையாய் உள்ளது. இதே காரியத்தை இங்கே செய்யக்கூடிய ஒரு மனிதனை நான் வைத்திருக்கிறேன்'' என்றான். அவர்களும் அதை செய்தனர். ஆள்மாறாட்டக்காரர்களே! அவன், ”நான் ஒரு தீர்க்கதரிசியாய் இல்லாதிருந்தால், அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்பதை அறியாதிருந்தால், 'அது ஒன்றுமற்றதாய் உள்ளது என்று நான் கூறியிருந்திருப்பேன்,' ஏனென்றால் இங்குள்ள இந்த ஆள் மாறாட்டக்காரர்கள் நான் செய்து கொண்டிருக்கிற அதே காரியத்தை செய்கிறார்களே'' என்றான். ஆனால் அது தேவனிடத்தி லிருந்து வந்தது என்பதை அவன் அறிந்திருந்தான், எனவே அவன் அதை நிலையாய் பற்றிக் கொண்டான். தேவன் ஜனங்களை விடுவிப்பதாகவும், அவர்கள் ஒரு மலையண்டைக்கு வருவார்கள் என்றும் அவர் கூறி யிருந்தார். அவர்கள் அந்த நாளில் ஒருக்கால் திரும்பி வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அதுவோ பல வருடங்கள் கழித்தே நடந்தது, ஆனால் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்களோ அந்த மலை யண்டைக்கு வந்தனர், தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார். அவர் கூறியிருந்தது போலவே, அவர் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு சென்றார். அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்திருந்தான். 47இப்பொழுது உடனே நான் மற்றொரு சாட்சியை, நான்காவது சாட்சியாய் உள்ள யோசுவாவை அழைக்கப் போகிறேன். அவன், “தேவன் எங்களுக்கு வாக்குத்தத்தத்தை கொடுத்தார், நாங்கள் ........ அங்கு சென்றோம்” என்றான். அது சுமார் நாற்பது மைல் தூரமாகவே இருந்தது. “நாங்கள் காதேஸ்பர்னேயாவை சென்றடைந்தபோது, நாம் அதை கைப்பற்றிக்கொள்ள முடியுமா அல்லது முடியாதா என்பதை கண்டறிய மோசே சாட்சிகளை அனுப்பினான். ஓ, அமலேக்கியர்கள், அந்த பெரிய இராட்சதர்கள், உயர்ந்த மதில்களைப் போன்றுள்ளனர்''. எனவே, ”நாம் அதை கைப்பற்றவே முடியாது, அது அவ்விதமாய் காணப்பட்டது“ என்றனர். ஆனால் யாரோ ஒருவர் அங்கு சென்று, அந்த தேசத்தில் நன்றாயிருந்த ஒரு அத்தாட்சியை கொண்டு வந்தார். எனவே அவன், “மற்ற கோத்திரங்கள் யாவும், அவர்கள், 'ஓ, நாம் அதை கைப்பற்ற முடியாது' என்றனர்'' என்று கூறினான். அவன், ”நான் எழும்பி நின்று, ஜனங்களை அமர்த்தி, அது அங்குள்ள காரியத்தின் உருவத்தைக் குறித்தது அல்ல என்றும், அது தேவனுடைய வாக்குத்தத்தமாய் இருந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்து, தேவன் அதைச் செய்வார்“ என்றான். அவன், ”நான் ஜனங்களை அமைதிப்படுத்திய பின் அவர் எங்களை அழைத்துச் சென்று விடவில்லை, அடுத்த நாளில், அதற்கு அடுத்த நாளில் எங்களை அழைத்துச் செல்லவில்லை. நாற்பது வருடங்கள் கழித்தே அவர் எங்களை அழைத்துச் சென்றார். ஆனால் எப்பொழுது அவர் எங்களை அழைத்துச் செல்லப் போவதாக இருந்தார் என்பதை அவர் கூறவில்லை. அவர் எங்களை அங்கே அழைத்துச் செல்வதாக கூறினார். எனவே நாங்கள் அங்கு சென்றோம்'' என்றான். 48நான் ஒரு வினாடி அப்படியே ஏசாயா வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஏசாயாவைக் கவனியுங்கள். அவன், “நான் ஜனங்களுக்கு மத்தியில் ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாய் இருந்தேன். எல்லோரும் என்னை விசுவாசித்தார்கள். உசியா இராஜாவிலிருந்து கீழ்நிலையில் உள்ளவர்கள் யாவரும், அவர்கள் என்னை விசுவாசித்தனர். நான் ஒரு ரூப்காரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாய் இருந்தேன். நான் கூறினதை, தேவன் நிறைவேறச் செய்தார். அவர் - அவர் நான் கூறின வார்த்தைகளை நிறைவேறச் செய்தார், ஏனென்றால் நான் அவைகளை அவருடைய நாமத்தில், யெகோவாவின் நாமத்தில் கூறினேன்'' என்றான். அவன், ”ஒருநாள் யெகோவா என்னிடத்தில் பேசி“' 'நான்' அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கப் போகிறேன், ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்' என்றார். நான் அதை கூறினேன். நான் அதை யெகோவா உரைத்ததைப் போன்றே அப்படியே கூறினேன்'' என்றான். மேலும், “ஒவ்வொரு எபிரெயப் பெண்ணும் சிறு பிள்ளையின் காலணிகளையும் எல்லா வற்றையும் ஆயத்தமாய் வைத்துக்கொண்டு, அந்த குழந்தையை பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தனர் என்பதை இந்த நீதிமன்றத்தில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பல மாதங்கள் கடந்தும், அது சம்பவிக்கவில்லை . பல வாரங்கள் கடந்தும் அது சம்பவிக்கவில்லை . சுமார் எண்ணூறு வருடங்கள் கழித்து, அது சம்பவித்தது. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பாலகனைப் பெற்றாள்'' என்றான். யெகோவா அவனிடத்தில் உன்னுடைய வயதில் உள்ள யாரோ ஒரு கன்னிகைக்கு அது நாளை சம்பவிக்கப் போவதாயிருக்கிறது என்று ஒருபோதும் கூறவேயில்லை. அவர் வெறுமனே, ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றார். அது இதனை தீர்க்கிறது. அவர் எப்பொழுது என்று கூறவேயில்லை. அவர் வெறுமனே அவள் கர்ப்பவதி யாவாள் என்றே கூறினார். 49இப்பொழுது, இதை நீதி மன்றம் ஏற்றதாக கருது மானால், நான் அவருடைய அடுத்த சாட்சியாய் இருக்கலாமா? அடுத்த சாட்சியாக, நான் அவருக்காக சாட்சி கூற விரும்புகிறேன். நான் சாட்சி கூறுவதென்னவெனில் இந்நாளுக்கான வார்த்தையின் வாக்குத்தத்தத்தையே. ஒரு சிறு குழந்தையாய் கென்டக்கியில் பிறந்தபோது, அங்கே அந்த ஒளி நின்றதையும், மற்ற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் அந்த ஜெப அட்டைகளின் மேல் காண்கிறீர்கள். நான் என் தாயாரிடத்திலும், என் தந்தை யாரிடத்திலும், அந்நாட்களிலிருந்தவர்களிடத்திலும் கூறினேன். இதை தனிப்பட்ட முறையில் கூறாமல், நான் அவருக்கு முன்பாக ஒரு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன். இது எழுத்து வடிவில் அவராய் உள்ளது. அது என்ன குறிப்பிட்டுக் கூறினது என்பதை நான் அறியவில்லை; எவருமே அறிந்திருக்கவில்லை. அந்நாட்களில் அங்கே அந்த மலைகளில் ஒரு சிறிய பழைய ...... இப்பொழுது நீங்கள் யாவரும் வைத்துள்ள ஒரு கண்ணாடி ஜன்னல் கூட இருக்கவில்லை; அப்பொழுது நீங்கள் ஒரு ஜன்னலாகத் தள்ளி திறக்கும்படி ஒரு சிறிய பழையக் கதவை வைத்திருந்தீர்கள். அந்த காலையிலே ஒரு ஒளி உள்ளே வந்தது. நான் அதை ஜனங்களிடத்திலும், தாயாரிடத்திலும் கூறுவேன். நான் கூறுகிற காரியங்கள், அவைகள் எப்பொழுதுமே அந்தவிதமாகவே சம்பவிக்கும். அவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள், “அது அவ்வண்ண மாய் அல்ல'' என்றனர். ஆனால் சுமார் முப்பது வருடங் களுக்குப் பின்னர், தேவன் அது அவ்வண்ணமானது தான் என்பதை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டு அதை நி ரூ பித்தார். அது அவ்வண்ண மாகவே இருந்தது, ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தமாய் உள்ளது. 50ஏழு வயதிலே, மரத்தண்டையிலே, அங்கிருந்து ஒரு சத்தம் என்னிடத்தில் பேசி, “புகைக்காதே, புகையிலையை மெல்லாதே, குடிக்காதே, உன்னுடைய சரீரத்தை அசுசி படுத்திக் கொள்ளாதே” என்றுரைத்தது. ஒரு கள்ளச்சாராயக்காரனுடைய வீட்டில் இருந்த எனக்கு, வேதம் என்னவென்றும், அதன் ஒரு வார்த்தையைக் கூட அறியாமலிருந்தேன். நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு பஞ்சாங்கத்தை கண்டுபிடிக்கலாமேயன்றி, ஒரு வேதாகமத்தை கண்டுபிடிக்க முடியாது. ஒன்றுமற்ற ஒரு கூட்டமாய் ....... என்னுடைய ஜனங்களுக்கு விரோதமாக பேசவில்லை, ஆனால் தேவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனக்கு முன்பிருந்த என்னுடைய ஜனங்கள் எந்த வழியிலுமே இல்லாமலிருந்தனர். அதற்கு முன்னரோ கத்தோலிக்கத்தில் இருந்தனர். அவர்கள் எல்லாரும் சபையிலிருந்து தூரமாய் விலகி திருமணம் செய்து கொண்டனர். பக்திமார்க்கமே இல்லாதிருந்தது. நாங்கள் அதற்கு எவ்வித கவனமும் கூட செலுத்தவில்லை. ஆனால் அவர் - அவர் என்னிடத்தில் என்ன சம்பவிக்கப்போவதாய் இருந்தது என்பதையும், நான் புகைக்கவோ அல்லது குடிக்கவோ அல்லது என்னுடைய சரீரத்தை எந்த வழியிலும் அசுசிபடுத்திக் கொள்ளவோ கூடாது. ஏனெனில் நான் பெரியவனாகும்போது, நான் செய்யும்படியான ஒரு ஊழியம் இருக்கும் என்றும் கூறினார். நல்லது, அது அநேக வருடங்களுக்குப் பிறகு இருந்தது. ஆனால் எப்படியாயினும் அது சம்பவித்தது. அது அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதை காட்டுகிறது. பதினேழு வருடங்களுக்குப் பிறகு அவர் அங்கே ஒரு புதரில் எனக்குத் தோன்றி ...... அதற்கு அடுத்த நாள் அவர் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இணைக்கப்படுவதையும், அதிலிருந்து பதினாறு பேர் விழுவதையும் காண்பித்தார் என்பதை நாம் அறிவோம். நான் தாயாரிடம் கூறினேன், ஒரு மரத்திற்கு எதிரே அமர்ந்து அதைக் கண்டேன். அவள், “தேனே, நீ உறங்கியிருப்பாய்'' என்றாள். நானோ, “இல்லை, நான் ஒருபோதும் தூங்கவே யில்லை. நான் அதை கவனித்தேன்” என்றேன். அந்த நாளிலிருந்து சரியாக பதினேழு வருடங்கள் கழித்து, ஜெபர்சன்வில்லிருந்து கென்னடக்கிக்கு நகராட்சி மேம்பாலம் இணைக்கப்பட்டது. அதில் சரியாக கூறப்பட்டதைப் போன்றே, ஏழு ....... பதினாறு பேர் அதன் மேல் தங்கள் ஜீவனை இழந்து விட்டனர். ஹா, எனவே திரு. அவிசுவாசி என்னை தொடர்ந்து இவ்வண்ணமாய் சோதித்து வந்திருக்கிறானே! 51இயேசுவானவர் தன்னுடைய கரத்தில் ஆணிகள் அறைந்த வடுக்களோடு இங்கிருப்பதைக் குறித்து, நான் இந்த குருட்டு குற்றஞ்சாட்டும் வழக்குரைஞரை கவனத்திற்கு அழைக்கிறேன். அவர் அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒருபோதும் கூறவேயில்லை . அவர், “அவர் பரலோகத்திலிருந்து திரும்புகையில், முழங்கால் யாவும் முடங்க வேண்டும் என்றும், கண்கள் யாவும் அவரைக் காணும் என்றும், நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்” என்றார். மாற்குவில், அவர் என்ன செய்வார் என்றும், அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்த ஆவியின் வல்லமையில் திரும்புவதாக மட்டுமே அவர் வாக்களித்தார். அவர் வெறுமனே ...... வில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்ளுகிறதில்லை. 52இப்பொழுது, இந்த விவாதத்தின் அடிப்படையில், இந்த பிற்பகல் நமக்கு ....... ஜீவிக்கிற ......... எனவே நான் இதை தவிர்த்துவிடப் போகிறேன். நான் இந்த விளக்க பாட பக்க குறிப்புகளையும் மற்ற காரியங்களையும் திருப்புகின்றதை நீங்கள் காண்கிறீர்கள், நான் அதை விளக்கிக் கூற வேண்டுமென்றிருந்தேன். ஆனால் இப்பொழுது இதுவே புரிந்து கொள்ள போதுமானதாய் உள்ளபடியால் நாம் முடித்து விடலாம் என்று நான் கருதுகிறேன். இப் பொழுது அவர்கள் இன்ன மும் அதை நம்பமாட்டார்கள். இயேசு, “நோவாவின் நாட்களில் இருந்தது போல, லோத்தின் நாட்களில் இருந்தது போல, கடைசி நாட்களிலும் இருக்கும்” என்பதை வாக்களித்தார். நாம் அதை புரிந்து கொண்டோம். அது இங்கே இருக்கிறது. அது ஏற்கனவே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது, அப்படியே எத்தனை வேத வாக்கியங்கள்! சோதோமின் காலத்தில் ஆபிரகாமிற்கு என்ன சம்ப வித்த தோ, அது வே கிறிஸ்துவுக்குள் இருக்கிற ஆபிரகாமினுடைய இராஜரீக வித்திற்கு மீண்டுமாய் திரும்பவும் சம்பவிக்கும்; கிறிஸ்து வார்த்தையின் ரூபத்தில் திரும்பி, மானிட சரீரங்களில் கிரியை செய்து, இது அடையாளமாய் இருக்கும் என்றும், அதை செய்வதாகவும் அவர் வாக்களித்த அடையாளங் களை காண்பிப்பார். அவர் அதைச் செய்வார் என்று அவர் வாக்களித்தார். தேவன் அதை வாக்களித்தார். தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்வார். 53இப்பொழுது, சில வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம், “இந்த ஊழியத்தில் மூன்று கட்டங்கள் உண்டா யிருக்கும். அவைகளில் ஒன்று ஜனங்களின் கரத்தை பற்றிப் பிடித்து, அவர்களுடைய தொல்லைகள் என்னவென்பதை அறிந்து கொள்வதாயிருக்கும்'' என்றார் என்று நான் உங்களிடம் கூறினேன். அது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? நிச்சயமாக. அவர் என்னிடத்தில், ”நான் உத்தமமாயிருந்தால்“, ”நான் அவர்களுடைய இருதயத்தில் உள்ள இரகசியத்தையும் கூட அறிந்து கொள்வேன் என்பது சம்பவிக்கும்'' என்று கூறினார் என்பதை நான் உங்களுக்குக் கூறவில்லையா? நான் அதை உங்களுக்கு கூறினேனா? எத்தனை பேர் அதை மறவாதிருக்கிறீர்கள்? அது சம்பவித்ததா? அது அதற்கு அடுத்த நாளே சம்பவிக்கவில்லை, அது அநேக வருடங்கள் கழித்துதான் சம்பவித்தது. ஆனால் அது சம்பவித்தது. அவர் கீழே ஆற்றண்டையில் கூறினார், அவர், “யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவின் வருகையை அறிவிக்க அனுப்பப்பட்டபோது, அவனுடைய ஊழியத்தின் முடிவிலே இயேசு வந்தார். யோவான் அனுப்பப்பட்டதை போல, உன்னுடைய ஊழியம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் இருக்கும்” என்றார். கடந்த பதினைந்து வருடங்களில் உலகம் முழுவதிலும், தேவனுடைய ஜனங் களுக்கு மத்தியில் ஒரு உலகளாவிய எழுப்புதல் இருந்து வருகிறது; நீண்ட எழுப்புதல். எந்த எழுப்புதலுமே மூன்று வருடங்களுக்கு மேல் நீடித்ததில்லை என்பதை எந்த சரித்திரக்காரனும் அறிவான். ஆனால் இது பதினைந்து வருடங்களாக உள்ளது. இன்றைய சபையை நோக்கிப் பாருங்கள், அது குளிர்ந்து போய்விட்டது. நாம் அவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தம்மைத் தாமே ரூபகாரப்படுத்திக் கொண்டும், காண்பித்துக் கொண்டுமிருக்கிறார். 146. இப்பொழுது இந்தக் காரியங்கள் யாவும் சம்பவித் திருக்கின்றன. அங்கு அவர், “நீ இருதயத்தின் இரகசியத்தை அறிந்து கொள்வாய்'' என்று வாக்களித்திருந்தார் 54இப்பொழுது மூன்றாவது கட்டமானது இந்த ஊழியத்தில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அதற்குள்ளாக செல்லும்படி நான் நேரத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் நான் அதை கூறவேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன். ஆனால் இங்குள்ள உங்களில் அநேகர் அதைக் குறித்து, பாருங்கள், என்ன சம்பவித்துள்ளது என்பதைக் குறித்தும் அறிவீர்கள். 55இப்பொழுது, நான் கீழே ஆர்கன்ஸாஸில் உள்ள கான்ஸாஸ் பட்டிணத்திற்கு முதலில் வந்தபோது, இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்றும், அவைகள் இங்கேயே உள்ளன என்றும் அப்பொழுது நான் உங்களிடம் கூறினேன். அவைகள் சம்பவித்திருக்கின்றன என்பதற்கு நா . னுள்ள சாட்சிகளாய் இருக்கிறோம். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.] ....... அது சம்பவிக்கும் என்று தேவன் கூறியிருக்கிறார். அது உடனே அப்பொழுதே சம்பவிக்கும் என்று அவர் கூறவில்லை . அது சம்பவிக்கும் என்று அவர் கூறினார். மாற்கு 16-ல், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்றார். நான் ஒரு விசுவாசியாய் இல்லாவிட்டால், பின்னை ஏன் இந்த வார்த்தை சத்தியமாய் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்குமா? நீங்கள் விசுவாசிகளாயிராவிட்டால், பின்னை ஏன் தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்? நீங்கள் எல்லாவிதமான கிரியைகளின் உறுதிப்படுத்துதலையும், உடையவர்களாயிருக்கலாம். நீங்கள் ஓடலாம், அந்நிய பாஷையில் பேசலாம், பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற ஜனங்கள் செய்கிறது போல காரியங்களைச் செய்யலாம். ஆனால் உங்களுடைய இருதயத்தில் ஏதோ காரியம் உண்மை யாயில்லையென்றால், அது ஒருபோதும் வார்த்தையை ஜீவனுக்கு கொண்டு வராது. ஆனால் உண்மையான ஒரு காரியம் அங்கிருக்குமானால், “வானமும், பூமியும் ஒழிந்து போம், ஆனால் அந்த வார்த்தையோ ஒழிந்து போகமுடியாது”. 56விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால், அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' நீங்கள் மற்றவர்கள் குணமடைவதை காண்கிறீர்கள். அவர்கள் அப்பொழுதே சுகமடைவார்கள் என்று அவர் கூறவில்லை . அவர், ''அவர்கள் அதை விசுவாசித்தால், அவர்கள் சுகமடைவார்கள்'' என்றார். அது சத்தியம் என்பதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? அந்த தேவனுடைய வார்த்தை இன்னமும் உண்மையாய் இருக்கிறது என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது அப்படியே ஜனங்களுக்கு தவறாய் வியாக்கியானிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? அது அப்படியே தவறாய் வியாக்கியானிக்கப்பட்டிருக்கிறது. 57இப்பொழுது, லூத்தரன் நாட்களில் அல்ல, பவுலின் நாட்களில் அல்ல, நோவாவின் நாட்களில் அல்ல, இந்த மற்ற சாட்சிகளின் நாட்களில் அல்ல, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்று நான் உங்களிடம் கூறினது அல்ல, ஆனால் இன்றைக்கு கான்ஸாஸ் டோப்காவில், இந்நாளில், இந்த வேளையில், இந்த நிமிடத்தில், நாம் தேவனுடைய வார்த்தையை ஒரு பலப்பரீட்சைக்கு அழைப்போமாக. கடைசி நாட்களில் இது சம்பவிக்கும் என்று அவர் வாக்களித்தார். இப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? சபையோர் “ஆமென்'' என்கின்றனர். - ஆசி.] அவர் தேவனாயிருக்க வேண்டிய படியால் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். அவர் அதை செய்ய வேண்டியவராய் இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். 58இப்பொழுது, “சோதோமின் நாட்களில் இருந்தது போல, மனுஷகுமாரனுடைய வருகையிலும் அதே காரியம் இருக்கும்” என்றும், அவர் ஆபிரகாமிற்கும், அவனுடைய வித்திற்கும் சோதோமில் வெளிப்பட வேண்டியதாயிருந்தது போலவே கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்படுவார்'' என்று அவர் வாக்களித்துள்ளாரா? அவர் அதை வாக் களித்துள்ளாரா? (சபையோர், “ஆமென்'' என்கின்றார்கள். - ஆசி.] லூக்கா 17வது அதிகாரம் 30வது வசனம், நீங்கள் அதை வாசிக்க முடியும். இப்பொழுது, அவர் அதை வாக்களித்தார். அவர் அது சம்பவிக்கும் என்று கூறினார். இயேசு எல்லா வேத வாக்கியங்களும், அவர் வாக்களித்த யாவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார். இந்த கடைசி நாட்களில் அவர் என்ன செய்வார் என்று மல்கியா 4-ல் வாக்களித்துள்ளாரா? இதற்குப் பிறகு உடனடியாக அக்கினி வந்து, அவிசுவாசியை சுட்டெரிக்கும். நீதிமான்களோ அவிசுவாசியின் சாம்பல்களின் மேல் நடப்பார்கள். அது உண்மை . நல்லது, நாம் இங்கே வாசலண்டையில் இருக்கிறோம். 59இப்பொழுது, பெரிய ஜலப்பிரவாகத்துக்கு சற்று முன்னர், அவர் என்ன வாக்களித்தார்? நோவா - நோவா வெளி வருவதற்கு சற்று முன்னர் ........ இல்லை மோசே இஸ்ரவேல் புத்திரரை வெளியே கொண்டு வருவதற்கு சற்று முன்னர் என்ன சம்பவித்தது? இயேசுவின் வருகைக்கு சற்று முன்னர் என்ன சம்பவித்தது? யோவான், நாம் அவனை சாட்சி கூற அழைத்து வரவில்லை. நாம் இங்கே கீழே அவனை வைத்திருந்தோம். ஆனால் ஒரு சாட்சியாய் அல்ல, ஆனால் எப்படி அவன் வனாந்திரத்திற்குள் செல்லும்படி அந்நாளின் எல்லா வேத சாஸ்திரங்களிலிருந்தும் தூரமாய் அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் அடையாளங்கண்டுகொள்ள வேண்டிய தாயிருந்தது. அவன் மேசியாவை அடையாளங் கண்டு கொள்ள வேண்டியதாய் இருந்தது. நாம் அவனுடைய தகப்பனின் வேத பாடசாலைக்கு அவன் சென்றிருந்தால் நலமாயிருந்திருக்கும் எனலாம். “இப்பொழுது நான் உங்களுடைய தகப்பனுடைய ஒரு மகத்தான நண்பன். ஓ, அவர் ஒரு மகத்தான வயோதிப மனிதன், நான் அவரை நேசிக்கிறேன். எனக்குத் தெரியும் ...... இப்பொழுது அந்த மேசியா சகோதரன் ஜோன்ஸ் தானே? இப்பொழுது யோவானே, அவர் இருப்பது உனக்கு தெரியுமே?'' என்று கூறியிருப்பார்கள். பாருங்கள், அவன் தன்னை வேறு பிரித்துக் கொண்டான். அவன் ஒன்பது வயதிலே வனாந்திரத்திற் குள்ளாக சென்றான், ஏனென்றால் அவன் ஒரு வனாந்திர பிரியனாய் இருந்தான். எலியாவின் ஆவி அவன் மேல் இருந்தது. எலியாவின் ஆவி ; எலியா அல்ல, அவன் மனிதனாய் இருந்தான்; அது அந்த நாளில் வார்த்தை யோடிருந்த தேவனுடைய ஆவியாய் இருந்தது. அவன் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்றான். ஆகையால் அவன் வெளி யே வந்த போது, அவன் - அவன் கிறிஸ்துவை அடையாளங் கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது, நல்ல மனிதனை என்றல்ல, ஆனால், “அவர் மேல் ஆவியானவர் இறங்குவதை நீ காண்பாய்''. அந்த மனிதன் மிகச் சிறந்த போதகராய் இருந்தார் என்பதினால் அல்ல, அந்த மனிதன் அந்நாளில் தேசத்தில் மிகவும் விலையேறப்பெற்ற நபராய் இருந்தார் என்பதினால் அல்ல. ஆனால், ”வார்த்தையான வரை, அவர் மீது இருந்த பரிசுத்த ஆவியானவர், தாமே அடையாளங் காட்டினார்''. அதே வார்த்தை தாமே வார்த்தையை அடையாளங் காட்டியது. 60இப்பொழுது அவர் அதை கடைசி நாட்களில் வாக்களித்தார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிற இயேசுவானவர் அதை செய்வார். நீங்கள் அதை விசுவாசிக் கின்றீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) இப்பொழுது ஒரு வினாடி நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. விசுவாசமுடையவர்களா யிருங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசியுங்கள். [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார், பின்னர் வியாக்கியானம் கொடுக்கிறார். ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) கர்த்தருக்கு நன்றி. 61சரி. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர், “ஆமென்'' என்கிறார்கள் . - ஆசி.) இப்பொழுது அவர் தம்மை ரூபகாரப்படுத்த என்ன வாக்களித்தார்? ஒரு மனிதனில், ஒரு மானிட சரீரத்தில், அவர் ஆபிரகாமுக்கு செய்தது போல, “மனுஷகுமாரன் ......” அது மனுஷகுமாரனாய் இருக்கும், இல்லை-இல்லை-இல்லை. இப் பொழுது தேவ குமாரனாய் அல்ல; ஒரு மனுஷ குமாரனில் தேவ குமாரன். எசேக்கியேல் 1-வது அதிகாரம் 2-ம் வசனத்தில், இயேசுவானவர் தம்மை எவ்வாறு அழைத்துக் கொண்டாரோ அப்படியே யெகோவா எசேக்கியேலை மனுஷகுமாரன் என்றழைத்தார். நீங்கள் அதனை இந்த வார போதனையினூடாக புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது பாருங்கள், மனுஷகுமாரன் என்றால் என்ன? தீர்க்கதரிசி. மல்கியா 4 என்னவாயிருந்தார்? ஒரு தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். கடைசி நாட்களில் சம்பவிக்கவிருந்த இந்த காரியங்கள் என்ன? இப்பொழுது அவர் எப்பொழுது என்று ஒரு போதும் கூறவில்லை அவைகள் சம்பவிக்கும் என்று அவர் கூறினார். அவைகள் சம்பவித்தன. இப்பொழுது நீங்கள், அவர் இன்னமும் தேவ குமாரனாய், மனுஷ குமாரனாய் இருந்தால்; தாவீதின் குமாரனைப் போல கடைசி நாட்களில் தாவீதின் சிங்காசனத்தின் மேல் வெளிப்படுத்தப்பட ஆயத்தமா யிருந்தால் ....... பாருங்கள், கவனியுங்கள், அப்பொழுது அவர் ............ அது உண்மையானால், அவர் அதை வாக்களித்தார். அவர் அந்த வார்த்தைக்கு கடமைபட்டவராய் இருக்கிறார். அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவராய் இருக்கிறார் 62இப்பொழுது நீங்கள் உங்களுடைய விசுவாசத்தோடு அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொடுங்கள். நான் இந்த உரிமை கோரிக்கைகளை உண்டு பண்ணியிருக்கிறேன். அது தேவனுடையதாயிருந்தால் அது நிறைவேறும்; அது தேவனுடையதாயில்லையென்றால், அது நிறைவேறாது. அது மட்டுமே உண்மையாய் உள்ளது, நாம் விசுவாசிகளுக்கு மத்தியில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை பாருங்கள். நான் ஒரு விசுவாசியாய் இருப்பது போன்றே நீங்களும் ஒரு விசுவாசியாய் இருக்க வேண்டும். இது சத்தியமாய் இருக்க வேண்டும் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசித்தால், அது சம்பவிக்கும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் ஜெபம் செய்யுங்கள். நாம் ஒரு பக்கத்திலிருந்து துவங்குவோம், அப்படியே ஒரு பக்கத்திலேயே முழு கவனத்தையும் செலுத்துவோம். ஏதோ ஓரிடத்தில், சுவற்றின் எதிரே இங்குள்ள இந்தப் பக்கத்திலிருந்து துவங்க விரும்புகிறேன். நீங்கள் விசுவாசமாயிருங்கள். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். அப்படியே விசுவாசித்து, “கர்த்தாவே!'' என்று கூறுங்கள். இப்பொழுது என்னை நோக்கிப் பார்க்காதீர்கள், பாருங்கள். நீங்கள் என்னை நோக்கி பார்க்க முடியும். ஆனால் பாருங்கள், உங்களுடைய விசுவாசம் அதற்கு அப்பால் நோக்கிப் பார்க்கட்டும். நீங்கள் மாம்சப்பிரகார மான கண்களோடு என்னை நோக்கிப் பார்க்க முடியும். ஆனால் உங்களுடைய விசுவாசக் கண்களோடு அவரை நோக்கிப் பாருங்கள் . அவரே அந்த வார்த்தையாய் இருக்கிறார். பாருங்கள், அவர் முற்றிலுமாக முன்பே கூறப் பட்டிருக்கிற காணப்படக்கூடாத நிலையிலிருந்த தன்னுடைய முகமூடியை மாற்றிக் கொண்டு, வார்த்தையானவர் மாம்சமானார். விசுவாசமுடையவர்களாயிருங்கள். 63இப்பொழுது சுற்றும் முற்றும் அசையாதீர்கள். உண்மையிலே அமைதியாய், பயபக்தியாய் இருங்கள் . நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் செல்லக்கூடும். ஆனால் உண்மையாகவே அமைதியாய், பயபக்தியாய் இருங்கள் . இப்பொழுது, இது, இது என்ன? இது ஒரு வரம். ஒரு வரத்தை ஒரு பட்டயத்தைப் போன்று எடுத்துச் சென்று குத்துவது, வெட்டுவது, இழுப்பது அல்ல. அதுவல்ல அது. ஒரு வரம் என்பது பரிசுத்த ஆவியானவர் ஒரு மானிட சரீரத்தில் கிரியை செய்யும்படி உங்களை அப்படியே வழியிலிருந்து விலக்கிக் கொள்வதாகும். “தேவனுக்கு மகிமை, நான் ஒரு வரத்தை பெற்றுள்ளேனே! '' நான் ஒரு வரத்தைப் பெற்று விட்டேன், அல்லேலூயா!'' என்று கூற முயற்சிக் காதீர்கள். நீங்கள் ஒருபோதும் அதை பெற்றுக்கொள்வ தில்லை. நீங்கள் உங்களை அப்புறப்படுத்திக் கொள்வது எப்படி என்று அறிந்து கொண்டால் நலமாயிருக்குமே! அது ஒரு சக்கர நெம்புகோல் இணைப்பை இழுக்கிற தாய் உள்ளது. புரிகின்றதா? உங்களையே அவிசுவாசத்தி லிருந்து விசுவாசத்திற்குள்ளாக மாற்றி, அப்படியே பின்னாக விசை நெம்புகோலை சற்று அசைத்து, “நல்லது, நான் எப்பொழுதுமே ஒருவிதமான ஐயுறுவாதியாகவே இருந்து வந்திருக்கின்றேன். ஆனால் உண்மையிலேயே இப்பொழுது, இப்பொழுதோ நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்று இப்பொழுது கவனியுங்கள். அதை வெறுமனே ஒருமுறை செய்து என்ன சம்பவிக்கிறது என்பதை பாருங்கள். ஜெபியுங்கள். 64நான் செய்தியிலிருந்து முடித்துக் கொண்டு என்னை ஒரு வரத்திற்குள்ளாக்க முயற்சிக்கிறேன். எபிரெயர் 4 : 12 கூறுகிறது போல, “வகையறுத்தல், இருதயத்தில் உள்ள நினைவுகளை அறிந்து கொள்ளுதல்” என்பதன் மூலமாக அந்த வார்த்தையைத் தாமே வெளிப்படச் செய்வது ஒரு வரமாகும். உங்களோடுள்ள தவறு என்னவாயிருந்தாலும் ஜெ பியுங்கள். ஜெபித்து, ''தேவனே, நான் - நான் குறைவுள்ளவன். அந்த மனிதன் என்னை அறியான், ஆனாலும் நான் குறைவுள்ளவன்'' என்று வெறுமனே கூறுங்கள். நான் பிரசங்கித்திருக்கிற தேவனுடைய வார்த்தையின் படியாய், தேவனுடைய மகிமைக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என்னுடைய ஆதிக்கத்தின் கீழ் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது, என்ன சம்பவித்தாலும், கவலையில்லை ........ அப்படியே ஒரு நிமிடத்தில் ஏதோ காரியம் சம்பவிக்கலாம். இங்கே குறை கூறுகின்ற ஒருவர் அமர்ந்து கொண்டிருக்கிறார். நான் ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். புரிகின்றதா? எனவே அப்படியே உண்மையாகவே பயபக்தியாய் இருங்கள். ஏதாவது இடறல் ஏற் படுமானால், நீங்கள் அப்படியே அமைதியாய் அமர்ந்திருங்கள். நீங்கள் உண்மையாகவே அமைதியாக அமர்ந்திருங்கள். அந்த நபர் என்ன செய்ய போகிறாரோ அதை செய்யட்டும். என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். அவர்களுடைய செயலை செய்யட்டும். என்ன சம்பவிக்கிறது என்பதை பாருங்கள். அவர் தேவனாய் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் யுத்தத்தில் அவரை காணத் தான் வேண்டும். நீங்கள் சுகமளித்தலில் அவரை காணத் தான் வேண்டும். யுத்தத்தில் அவரை கவனியுங்கள். சாத்தான் தன்னுடைய மிகச் சிறப்பான பங்கை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வெறுமனே - அப்படியே அவன் அதை ஒருமுறை செய்யட்டும், என்ன சம்பவிக்கிறது என்பதை பாருங்கள் . 65இங்கே மற்றொரு நபர் வேதனைபட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் இங்கே அமர்ந்துள்ளனர். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவர் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அது முகத்தில் உள்ள நரம்புக் கோளாறு நிலை, ஒரு நரம்புக் கோளாறு நிலையாய் உள்ளது. அவள் ஒரு விதமான பருமனான ஸ்திரீயாக இருக்கிறாள். அவளுடைய கணவன் ஒரு வெள்ளை சட்டையை அணிந்திருக்கிறார். அவர் தன்னுடைய கரங்களை அவள் மீது வைத்துக் கொண்டிருக்கிறார். அது உண்மை . அதைக் குறித்துத்தான் நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், அது உண்மையானால், உன்னுடைய கரத்தை உயர்த்து, கவலைப் படாதீர்கள். அது நின்று விடும். நீங்கள் விசுவாசிப்பீர் களானால் நலமாயிருக்கும். அது ஒரு வாக்குத்தத்தமாய் இருக்கிறது. நீங்கள் அவருடைய வஸ்திரத்தை தொட்டீர்கள் இந்தப் பக்கத்தில் இங்கே சரியாக பின்னால் ஒரு ஸ்திரீ அமர்ந்து கொண்டிருக்கிறாள், அவள் பெண்களுக் குரிய ஒரு தொல்லையினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். நான் அவளுடைய ........ நம்புகிறேன். ஓ தேவனே! திருமதி ரீட், நான் உங்களை அறியேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அது உண்மையாய் உள்ளது, இல்லையா? நீங்கள், “கர்த்தாவே, என்னிடத்தில் இரக்கமாயிரும்'' என்று ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அவர் இரக்கமுடையவராயிருக்கிறார். இப்பொழுது அது உங்களை விட்டு நீங்கிவிடப் போகிறது. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் சந்தேகப் படாதீர்கள். நீங்கள் விசுவாசமுடையவர்களாய் இருங்கள். 66இதோ, இங்கே சரியாக கடைசியில் உள்ள ஒரு ஸ்திரீ, கறுப்பாய் காணப்படுகின்ற ஒரு சிறு தொப்பியை அணிந்து கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள் .... அது ஒரு நோயாய் உள்ளது. அவள் தொந்தரவை உடையவளாயிருக்கிறாள். அங்கே அவள் மீது அந்த ஒளி தொங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் காணவில்லையா? பார்த்தீர்களா? அவள் தன்னுடைய தலையை கீழே சாய்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னுடைய முழங்கால்களிலும் வேதனை உடையவளாய் இருக்கிறாள். அவள் தன்னுடைய முழங்கால்களை காயப் படுத்திக் கொண்டாள். அவள் விழுந்து தன்னுடைய முழங் கால்களை காயப்படுத்திக் கொண்டாள். பார்த்தீர்களா? நான் அவளை அறியேன்; தேவன் அதை அறிந்திருக்கிறார். ஆனால் அது உண்மை. ஸ்திரீயே அப்படித்தானே? இங்கே உன்னுடைய கரத்தை உனக்கு அடுத்து அமர்ந்துள்ள அந்த ஸ்திரீயின் மீது வை; அவளண்டைக்கு நேராக வா. அவள் ஒரு நரம்புக் கோளாறான நிலையிலிருந்து வேதனையுற்றுக் கொண்டிருக்கிறாள். அந்த நரம்புக் கோளாறு நிலைமையானது ......... அவளுக்கு கண்ணிலும் தொல்லை உண்டாயிருக்கிறது. அதன் காரணமாகவே அவளுடைய கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளன. அது உண்மை, அப்படித்தானே? உன்னுடைய கரத்தை உயர்த்து. நீ விசுவாசிக்க கூடுமானால் நலமாயிருக்கும். இந்த இன்னொரு ஸ்திரீ தன்னுடைய கரத்தை அங்கே சரியாக அவளுடைய பக்கத்தில் வைத்திருக்கிறாள், அது அவளை ஒருவிதமாய் கிளர்ச்சியடையச் செய்தது. ஆனால் காரணம், நீங்கள் ............ உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்கு கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய கணுக்கால்களில் உள்ளது. அது உண்மையானால் உன்னுடைய கரத்தை இந்தவிதமாய் அசைத்துக்காட்டு. சரி. அவர் என்ன செய்வார் என்று அவர் கூறினார்? “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 67இங்கே ஒரு மனிதன் எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் மூட்டு வீக்கத்தினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார். அவர் உண்மையாகவே ....... அவர் சுகம் பெறப் போகிறாரா அல்லது இல்லையா என்பதை நான் அறியேன். அவர் கிட்டத்தட்ட என் வயதுடைய ஒரு மனிதனாய் இருக்கிறார். அவர் மூட்டு வீக்கத்தினால் வேதனையுறுகிறார். அவர் இங்கிருந்து வரவில்லை. அவர் கான்ஸாஸ் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறார். தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களுடைய பெயர் என்ன வென்பதை தேவன் என்னிடம் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? திரு. பிரான்சிஸ், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள். ஐயா, அவன் அதிலிருந்து உங்களை கொள்ளையிட முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் - அவன் ....... நான் மற்றொரு மனிதனைக் குறித்து கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உங்களைத் தான். நான் அதை கூறினபோது உண்மையாகவே ஒரு விநோதமான உணர்வு உங்கள் மீது உண்டானது. உண்மையிலேயே இனிமையான, இதமான உணர்வு. அது உண்மையானால், இந்த விதமாக உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். அங்கே உன்னுடைய மனைவியுங் கூட அமர்ந்திருக் கிறாள். அவள் திருமதி பிரான்சிஸ். அவளும் கூட மூட்டு வீக்கத்தினால் அவதியுறுகிறாள். அவளுக்கு தன்னுடைய கண்களிலும், அவளுடைய காதுகளிலும் தொல்லை உள்ளது. அது சரியா? அது உண்மை. 68அவளுக்கு அடுத்து உட்கார்ந்துள்ள ஸ்திரீ, அங்கே அவளுக்கு அடுத்து, அவள் நரம்புகளின் வீக்கத்தடிப்பினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். சரி, அவளுக்கு உட்புறத்தில் ஏதோ கோளாறு உண்டு, ஒருவிதமான ........ அது சிறுநீரகப் பையில் உள்ள ஒரு கோளாறு. அவளுக்கு சிறுநீரகப்பை கோளாறு உள்ளது. அவளும் கூட கான்ஸாஸ் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறாள். திருமதி. கெர்ஃக். அது உண்மை . நான் ஜனங்களாகிய உங்களுக்கு முற்றிலும் ஒரு அந்நியனாய் இருந்தால், அவ்வாறு இருந்தால், நான் குறிப்பிட்டு கூறுவது சரியானால், இங்கே அழைக்கப்பட்ட இந்த ஜனங்களுக்கு நான் ஒரு அந்நியனாய் இருந்தால், அப்பொழுது அழைக்கப்பட்டிருக்கிற ஜனங்களாகிய நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது என்ன? மானிட சரீரத்தில் இறங்கி வந்து, மாம்சம் புசித்து, பாலைப் பருகின அதே தேவன். இயேசு கூறினார் ...... சரியாகக் கூறினால் ஆபிரகாம், அவர், “ஏலோஹுமாய்'' இருந்தார் என்று கூறினான். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். இயேசு, ”அந்நாட்களில் இருந்தது போலவே, அந்த யெகோவா, மனுஷகுமாரனாய் மீண்டும் தீர்க்கதரிசியின் ரூபத்தில், அவர் இருந்தது போலவே கடைசி நாட்களில் உங்களுடைய சரீரங்கள் மாற்றமடைய போவதற்கு சற்று முன்னர் மீண்டும் திரும்பி வருவார்'' என்றார். நாம், நாம் ...... பாருங்கள், சாராள் அந்த சரீரத்தில் அந்தப் பிள்ளையை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவளால் முடிந்ததா? ஆபிரகாமினாலும் அவனுடைய சரீரத்தில் முடியாதிருந்தது. அவனுடைய சரீரம் மாற்றப்பட வேண்டியதாய் இருந்தது. அவ்வாறே அந்த குமாரனை ஏற்றுக் கொள்ள நம்முடைய சரீரங்களும் மாற்றமடைய வேண்டியதாயுள்ளது. வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் குமாரனாய் இருக்கிறார். அது வார்த்தையாய் உள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது உங்களுடைய தலைகளை அப்படியே ஒரு வினாடி தாழ்த்துங்கள். 69எல்லா வகையிலும் முழுமையாக, உங்களுடைய முழு இருதயத்தோடு இந்த வாக்குத்தத்தங்களை உண்டு பண்ணி யிருப்பதில் தேவன் நியாயத் தீர்க்கப்பட்டிருக்கிறாரா? அவருடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இந்த சாட்சிகள் வெறுமனே போலியான சாட்சிகளென்றும், அவர்கள் அதை விசுவாசிக்க ஆரம்பத்திலேயே விசுவாசமுடையவர்களாயிருக்கவில்லை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வழக்கின் முடிவை தெரிவிப்பவர்களாயும், நீங்களே நியாயாதிபதியாயும் இருக்கிறீர்கள். வழக்கின் முடிவைத் தீர்மானித்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய சிந்தையில் தீர்மானம் எடுக்க வேண்டும். நீதிபதி தீர்ப்பைக் கூற வேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையாகிய மாற்கு 16 சத்தியமாய் இருக்கிறது என்பதை நீங்கள் உங்களுடைய சிந்தையில் தீர்மானித்து விட்டீர்களா? நீங்கள் தீர்மானித்திருந்தால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நான் சாட்சிகளை காட்சியிலே அழைத்து வந்து, இந்தக் கடைசி நாட்களிலும் அது அதே விதத்தில் வரும் என்றும், தேவனுடைய வார்த்தை சரியானதாய் இருந்தது என்பதையும் நிரூபித்தேன். இக்கடைசி நாட்களில் தேவனுடைய வார்த்தை இதை வாக்களிக்கிறது. உங்களுக்கு முன்பாகவும், உங்கள் ஒவ்வொருவருக்கு முன்பாகவும் அவைகளில் மற்றவைகளை நிரூபிக்க நான் இங்கிருக்கிறேன், நீங்களும் இங்கிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்படக்கூடும். நீங்கள் அதை விசுவாசித்தால், ஒவ்வொருவராக, இந்த விதமாய் அழைக்கப்படலாம். இந்த ஜனங்களை அழைத்து, அவர்களிடம் பேசி, பரிசுத்த ஆவியானவர் அழைத்திருப்பதைக் கூறுங்கள். 70“சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுது நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?'' அதிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறேன். அது அப்படியே தொடர்ந்து கட்டிடத்தில் எங்கும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது; அது அப்படியே பிரகாசிப்பதை நீங்கள் காண்கிறீர்கள், பாருங்கள், அதனைக் கொண்டு, உங்களை அதை விசுவாசிக்கும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தேவனிடத்தில் விசு வாசமாய் இருங்கள். அதை விசுவாசியுங்கள். அவர் இதை எழுதுவதில் நியாயந்தீர்க்கப் படுகிறார். அவர் அதை உறுதிப்படுத்தி, அது சத்தியமாய் இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார். அவர் அதை முப்பது வருடங்களுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் உரைத்து, இன்றைக்கு அதை நிரூபித்து விட்டார். அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதை கூறி, இன்றைக்கு அதை நிரூபித்து விட்டார். அவருடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது. ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் ஆவியினால் ஏவப் பட்டிருக்கிறது. அது முழுவதுமே சத்தியமாய் உள்ளது. மாற்கு 16, “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறியுள்ளது. தீர்ப்பளிக்கவுள்ளோரே, இந்த பிற்பகலில் இந்த நீதிமன்றத்தில் உங்களுடைய தீர்ப்பு என்ன? இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். [சபையோர், “ஆமென்'' என்கின்றனர். - ஆசி.) மாற்கு 16 சத்தியமாய் இருக்கிறதென்றும், ”அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால், அவர்கள் சொஸ்த மாவார்கள்'' என்பது இயேசு கிறிஸ்துவின் வார்த்தை என்று நீங்கள் முழுமையாய் உறுதி கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். (“ஆமென்.”'] ஆகையால், சாத்தானே, நீ போகத்தான் வேண்டும். திரு. அவிசுவாசியே, உனக்கு இனி எங்கள் மத்தியில் எவ்வித வேலை யும் கிடையாது. திரு. ஐயுறுதிவாதியே, திரு. பொறுமை யற்றவரே அது சம்பவிக்க எவ்வளவு காலமாகும் என்று நான் கவலைப்படவில்லை. ஆனால் அது சம்பவிக்கப் போகிறது. 71நீங்கள் என்னை ஒரு விசுவாசி என்று அழைக் கிறீர்களா? நீங்கள் அவ்வாறு அழைத்தால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நான் ஒரு விசுவாசி. நான் உங்களுக்காக ஜெபிக்கவும், உங்கள் மேல் கரங்களையும் வைக்கப் போகிறேன். இங்குள்ள உங்களுடைய போதகர்கள் விசுவாசிகளாய் இருக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். விசுவாசமாயிருக்கிற ஊழியக்காரர்கள் எத்தனை பேர் அங்கிருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். விசுவாசமுள்ள ஊழியக்காரர்கள் இங்கே ஒரு நிமிடம் அப்படியே வரும்படி நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். போதகரே, அது சரியா? பரிபூரணம். இந்த கட்டிடத்தில் ஒரு விசுவாசியாயிருக்கின்ற ஒவ்வொரு ஊழியக்காரரும் இங்கு வந்து அப்படியே ஒரு வினாடி என்னோடு நிற்கும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது எனக்கு உண்மையான விசுவாசிகளே தேவை. நினைவிருக்கட்டும், நமக்கு பாவனை விசுவாசிகள் தேவையில்லை. நமக்கு உண்மையான விசுவாசிகள் தேவை. இங்கு வந்து மேடையின் மேல் நில்லுங்கள். இப்பொழுது ஏதோ காரியம் சம்பவிக்கிறதை காணப் போகிறீர்கள். “நீர் எனக்கு கூறின சத்தியத்தை நான் விசுவாசிக்கிறேன்.'' 72இப்பொழுது நினைவிருக்கட்டும், அப்படியே ஒரு நிமிடம், உண்மையிலேயே அமைதியாயிருங்கள். இந்த ஊழியக்காரர்கள் வந்து கொண்டிருக்கும் போது நான் உங்களுக்கு ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். இப்பொழுது என்ன, என்ன சம்பவிக்கும்? உங்களுடைய செய்கை, உங்களுடைய செயல்பாட்டிலிருந்து ...... யாரோ நழுவிவிட்டார். அது சரி, இதன் பேரிலுள்ள உங்கள் செயல்முறையே உங்களுடைய தீர்ப்பாய் இருக்கும். அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது ஒரு ஜெப அட்டையை வைத்துள்ள ஒவ்வொருவரும் எழும்பி, இங்கே வலப்பக்கமாக செல்லுங்கள். இந்தப் பக்கமாக செல்லுங்கள். நீங்கள் உங்களுடைய இருக்கைகளுக்கு இடையேயுள்ள நடைபாதை யில் உள்ள நீங்கள் ஒவ்வொருவரும், உங்களுடைய நடை பாதையின் வலப்பக்கத்தில் உள்ளவர்கள், உங்களுடைய நடைபாதையின் வலப்பக்கத்திலிருந்து எழும்பி நில்லுங்கள். இப்பொழுது, அங்கே மற்றொரு மூலையில் உள்ள மற்றவர்கள் இந்த ஒரு வழியில் வரட்டும். சரி. ஜெப அட்டைகளோடு இந்தப் பக்கத்தில் உள்ள இவர்கள் யாவரும் இந்தப் பிரகாரத்தில் எழுந்து நில்லுங்கள்; இந்த வண்ணமாக வலப்பக்கத்தில் நில்லுங்கள். அது இடப் பக்கமாகும். மன்னிக்கவும், இங்கே இந்தப் பக்கம் உங்களுடைய வலப்பக்கமாய் இருக்கிறது. அது உங்களுடைய இடப்பக்கமாய் இருக்கிறது. இப்பொழுது உங்களுடைய வரிசையிலிருந்து அந்தவிதமாய் சுற்றி வாருங்கள். இப்பொழுது ஊழியக்காரர்களே, நீங்கள் யாவரும் இங்கே வந்து, இரண்டு வரிசைகளை உண்டு பண்ணுங்கள். இந்த வழியினூடாக, இந்த வழியில் இரண்டு வரிசைகளை ஏற்படுத்துங்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் சரியாக இங்கு சுற்றி வாருங்கள், இங்கு சுற்றி வாருங்கள் 73இப்பொழுது உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “இப்பொழுது மாற்கு 16 சத்தியமாய் உள்ளது என்று நான் முற்றிலுமாக விசுவாசிக்கிறேன் என்று மீண்டுமாய் தேவனுக்கு காண்பிக்கும்படி நான் விரும்புகிறேன்” என்று கூறுங்கள். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ''இப்பொழுது நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.'' அங்கே ஜெப வரிசையில் இல்லாதவர்களுக்கும், ஜெப வரிசையில் உள்ள இவர்களுக்காக ஜெபிக்கவும், விசுவாசி கள் என்ற முறையில் நம்முடைய முழு கூட்டத்தாரோடும் சேர்ந்து ஜெபிக்க எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். 74கர்த்தராகிய இயேசுவே, நீர் தேவனாயிருக்கிறீர், நீர், “நான் இருந்தவர்” அல்லது “நான் இருக்கப் போகிறவர்” என்பவராய் இல்லாமல் “நான் இருக்கிறவர்'' என்கின்ற மகத்துவமானவராய் இருக்கிறீர். நீர், ”நான் இருக்கிறேன்'' என்பவராக இருக்கிறீர். நிகழ்காலம். உம்முடைய வழியில் எந்த சக்தியும் நிற்கமுடியாது. நீரே தேவன். உம்மைப் போல் ஒருவருமில்லை. நீர் உம்முடைய வார்த்தைகளை உறுதிப்பட செய்கிறீர். இந்தப் பிற்பகலில் இந்த வழக்கு விசாரணையில் நீர் அதை சாட்சிகளினூடாக நிரூபித்திருக்கிறீர்; இந்த தீர்ப்பாளர்களுக்கும், இந்த நீதி மன்றத்திலும் கூட நீதிபதிகளாய் உள்ளவர்களுக்கும் அதை நிரூபித்து விட்டீர். நாம் நியாயமான வழக்கு விசாரணையை கொடுத்திருக்கிறோம். நாங்கள் சத்துரு கூறினதையும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் கூறினதையும் எடுத்துக் கொண்டோம். அவனுடைய சாட்சிகள் கூறினதையும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் அதை எதிர்வாதி பக்கத்து வாத விளக்க சாட்சிகளோடு திரும்ப விளக்கிக் காட்டினோம். இந்த வாக்குமூலங்களை ஏற்படுத்துவதில் தேவன் சரியென மெய்ப்பிக்கப்படுகின்றார் என்பதை அவர் நிரூபித்திருக் கிறார். ஏனென்றால் அவிசுவாசியானவன் முன்னிலைப் படுத்தக்கூடிய சாட்சிகளைக் காட்டிலும் அதிகமான சாட்சிகளின் மூலம் அவர் அதை விசுவாசிக்கு நிறைவேறச் செய்கிறார். இப்பொழுது அது உண்மையாயிருக்கிறது என்பதை நாம் அறிவோம். தேவனுடைய வார்த்தை சத்தியமாய் இருக்க வேண்டும் என்றும், அது சரியானதாய் இருக்க வேண்டும் என்றும், ஜனங்கள் நியாயந்தீர்த்திருக் கின்றனரா என்பதில் மட்டுமே அது அமைந்துள்ளது. 75பிதாவே, இங்கே இந்த மனிதர்கள் நின்று கொண்டிருக்கையில் ........ இங்கே இந்த வரிசையினூடாக கடந்து செல்கிற ஒவ்வொருவருக்கும், கர்த்தாவே, சுகத்தை அருளும். நான் சென்ற பிறகு, சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் மேல் கரங்களை வைத்தார் என்று கூறலாம். ஆனால் எவரும் செய்கிறது போன்றே வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்க இந்த போதகர்களுக்கு அதே அளவு உரிமை உண்டு என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். அவர்கள் ஏதோ ஒரு விசேஷித்த நேர சுவிசேஷகன் வரும்வரை காத்திருக்க வேண்டிய தில்லை. ஆனால் அவர்களுடைய சொந்த போதகரே அவர்கள் மேல் கரங்களை வைக்க உரிமையுடையவராய் இருக்கிறார். தேவனே, இன்றைக்கு இங்கே இந்த கரங்களின் வரிசையினூடாக கடந்து செல்லுகிற ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்தியருளும்; அவர்கள் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்க தேவனால் அழைக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டவர்கள். நாங்கள் பரிசுத்தமான கரங்களை உடையவர்கள் அல்ல என்பதை நாங்கள் அறிவோம், ஆனாலும் நாங்கள் 'எங்களையே நோக்கிப் பார்க்கவில்லை. எங்களை சுத்திகரிக்கவும், அவருடைய கட்டளையை நிறைவேற்றவும், இப்பொழுது தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவாகிய எங்களுடைய பலியையே நோக்கிப் பார்க்கிறோம். கர்த்தாவே, இங்கே இதனூடாக கடந்து செல்லுகிற ஒவ்வொரு மனிதனையும், ஸ்திரீயையும், பையனையும், பெண்ணையும் சுகமடையச் செய்யும். அவர்கள் இந்த மேடையிலிருந்து களிகூர்ந்து கொண்டே, அவர்கள் நல்ல ஆரோக்கியமான, இயல்பான நிலையில் இருப்பதைப் போன்றே செல்வார்களாக. இதை அருளும். இந்த தீர்ப்புக் குழுவினரின் தீர்ப்பானது அவர்கள் அதை உரிமை கோரினபோது, அவர் மெய்யென நிரூபிக்கப் பட்டார் என்றே இருப்பதாக. அவர்கள் கூறப்போகும் நியாயத் தீர்ப்பானது இது முதற்கொண்டு அவர்களுடைய செயலாய் இருப்பதாக. தேவனே இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 76சகோதரன் ராய் பாடர்ஸ் அல்லது பாடலை முன்னின்று நடத்துபவர் யாராவது, நீங்கள் இங்கு வந்து அப்படியே ஒரு வினாடி பாடலை முன்னின்று நடத்தினால் நலமாயிருக்கும். இப்பொழுது உங்களுடைய கண்கள் மூடப்பட்டேயிருக்கட்டும். இப்பொழுது, உங்களுடைய வரிசை வருகையிலே சரியாக வரிசையில் செல்லுங்கள் . இங்கே வரிசையினூடாக வாருங்கள் . இந்த மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் நான் ஜெபித்தேன். நான் ஏன் அவர்களை இங்கு மேலே நிறுத்தினேன். இப்பொழுது இங்குள்ள நீங்கள் இந்த வழியாய் கீழே வந்து, இவர்களுடன், இங்குள்ள இவர்களுடன் வரிசையில் சென்று, அவர்கள் வெளியே செல்லும்போதே செல்ல வேண்டும். பாருங்கள். சரி. இப்பொழுது அப்படியே காத்திருக்கும் வரை அவர்கள் ...... அவர்கள் தூரமாய் செல்லும் வரை காத்திருங்கள். இந்த வரிசை வெளியே வரும் வரையில் சரியாய் காத்திருங்கள்; பின்னர் நீங்கள், ஸ்திரீயே, இங்குள்ள சகோதரியே சரியாக அங்கேயே காத்திரு, பாருங்கள், அங்கேயே காத்திருங்கள், பாருங்கள். வாயில் காப்போர்களே, உங்களில் சிலர் அங்கே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். பாருங்கள், பாருங்கள், நீங்கள் இந்த வரிசைகளை முதலில் வெளிச் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த வரிசைகள் வெளிச் செல்லட்டும். அதன் பின்னர் இந்த வரிசை அவர்களை பின் தொடர்ந்து செல்லட்டும். பாருங்கள், இந்த வரிசையினூடாகவே வரட் இப்பொழுது நீங்கள் இங்கே வெறுமனே ஊகமாக வோ, வெறுமனே கற்பனையாகவோ இவ்வரிசையினூடாக வந்து கொண்டிருந்தால், வரிசையை விட்டு விலகி தரித்திருப்பதே நலம். அது உங்களை இன்னமும் மோசமாக்கி விடலாம். ஆனால் நீங்கள் இவ்வரிசையில் னூடாக விசுவாசமாய் வருவீர்களானால், அதனை உங்களிடத்திலிருந்து எதுவுமே எடுத்துப் போடமுடியாது. இது தீர்வு செய்கிற நேரமாய் உள்ளது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? வரிசையில் உள்ள நீங்கள், “இது அதுவாகத்தான் உள்ளது. நான் அதை விசுவாசிக்கிறேன். அதைக் குறித்த குற்றங்கூறுதலே இல்லை. அது இப்பொழுது முற்றப் பெற்றுவிட்டது. நான் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுது நீங்கள் வரிசையில் வரவில்லையென்றால், வரவில்லை யென்றாலும் பரவாயில்லை. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். வாருங்கள். 77தேவன் தம்மை வார்த்தையினால் ரூபகாரப்படுத்தி யிருக்கிறார், இப்பொழுது சாட்சியிலும், வழக்கு விசாரண யிலும், “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்க, அவர்கள் சொஸ்தமாவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் உங்களுடைய மேய்ப்பர்கள். இதைச் செய்ய நியமிக்கப்பட்டிருக்கிற ஒரே நபர் நானோ அல்லது ஓரல் ராபட்ஸோ அல்லது வேறு யாரோ ஒருவர் என்ற எண்ணத்தை நீங்கள் உடையவர்களாயிருக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொரு ஊழியக்காரனும் அதை செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு விசுவாசியும், அவன் ஒரு ஊழியக்காரனாய் இருந்தாலும் அல்லது ஊழியக்காரனாயிராவிட்டாலும் அதைச் செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறான். விசுவாசிக்கிற ஒவ்வொரு நபரும் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்க உரிமை உண்டு. அவர்கள் சொஸ்தமாவார்கள். 78உங்களுடைய போதகர் அல்லது வேறு யாராவது மட்டுமே வகையறுத்தலின் வரத்தை உடையவராயிருப்பார் என்று நான் கூறவில்லை. அவர்கள் அதைச் செய்ய வேண்டிய தில்லை; அது அவர்களுடைய அழைப்பும் அல்ல. அதைச் செய்யும்படியானதல்ல அவர்களுடைய அழைப்பு. அது ஒரு காலத்திற்கு ஒருவரே இருக்க வேண்டியதாய் உள்ளது. ஆனால் - ஆனால் நீங்கள் ஒரு விசுவாசியாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'', அது எந்த நபரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ”விசுவாசிக்கிறவர்களால் இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறீர்கள். சகோதரன் ராய், நம்பிடுவாய் என்ற பாடலை நீங்கள் முன்னின்று நடத்துங்கள். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். ஊழியக்காரர்களே அவர்கள் அருகில் கடந்து செல்லும்போது, அவர்கள் மேல் கரங்களை வையுங்கள். சபையோரும், நண்பர்களும், நீங்கள் இங்கே கடந்து செல்லும்போது, உங்களுடைய சிந்தையில் ஒரு சந்தேகமும் இருக்க வேண்டாம்; வெறுமனே வரிசையினூடாக இங்கு கடந்து சென்று, “அது தீர்ந்து விட்டது'' என்றே கூறுங்கள். 79இப்பொழுது நினைவிருக்கட்டும். நீங்கள் வழக்கில் தீர்ப்பளிக்கும் குழுவினராய் இருந்து வருகிறீர்கள். நீங்கள் உங்களுடைய தீர்ப்பை கூறிவிட்டீர்கள் என்றே நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினீர்கள். புரிந்து கொள்ளுகிற ஒவ்வொருவரும், “ஆமென்” என்று கூறுங்கள். {சபையோர், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) நீங்கள் உங்களுடைய தீர்ப்பை கூறிவிட்டீர்கள். இப்பொழுது இதற்குப் பின்னர் நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுவே நீங்கள் கூறினது சத்தியமா அல்லது இல்லையா என்பதை நிரூபிக்கும். இதற்குப் பிறகு நீங்கள் செய்வதைக் கொண்டே உங்களுடைய - உங்களுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் படும். அப்பொழுதே அது நிறைவேறும். நீங்கள் நீதிபதி யாயும், தீர்ப்பளிக்கும் குழுவினராயும் இருக்கலாம். நீங்கள் அதை உண்மையாகவே விசுவாசித்தால் அது நிறைவேற வேண்டியதாயுள்ளது. நீங்கள் பாவனையான விசுவாசங் கொண்டிருந்தால் அது சம்பவிக்காது. ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையினாலும் தேவனுடைய பிரசன்னத்தினாலும், அங்குள்ள ஒவ்வொரு காரியத்தினாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது காரியம் செய்யப்படும்படி விடப்பட்டிருக்கிறதா? அவர் இந்த பிற்பகலில் இங்கு வருவாரானால், அவர் உங்களை சுகப்படுத்தக்கூடுமா? இல்லை, இல்லை. அவர் அதை ஏற்கனவே செய்து விட்டார். புரிகின்றதா? அவர் எல்லா ........ இப்பொழுது ஒரு காரியமும் செய்யப்படும்படி விடப்பட்டிருக்கவில்லை. அவர் இங்கு தம்மைத்தாமே ரூபகாரப்படுத்தி, வார்த்தையின் மூலம் ஒவ்வொரு காரியத்தையும் நிரூபித்தார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் ........ நீங்கள் உங்களுடைய சிந்தையில் தீர்மானம் செய்துள்ளீர்கள். நீங்கள் வழக்கு விசாரணையை கேட்டுள்ளீர்கள். நீங்கள் தீர்ப்பைக் கூறியிருக்கின்றீர்கள். இப்பொழுதோ வந்து உங்களுடைய நியாயத்தீர்ப்பை காண்பியுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. (சகோதரன் பாடர்ஸ் நம்பிடுவாய் என்ற பாடலை சபையில் முன்னின்று நடத்துகின்றார். ஆசி.) சகோதரர்களே, இப்பொழுது ஜெபத்தில் இருங்கள். வாயிற்காப் போன்கள் ஒவ்வொருவரும் ஜனங்களை வரிசையினூடாக வரவிடட்டும். இப்பொழுது சற்று நெருக்கமாக எழும்பி நில்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் அந்தக் குழந்தையை தொடுங்கள். ஒவ்வொருவரையும் தொடுங்கள். ஒவ்வொரு மனிதனும் இப்பொழுது விசுவாசத்தோடு அந்த ஜனங்களைத் தொடுங்கள். உங்களுடைய கண்களை மூடுங்கள். (சகோதரன் பிரான்ஹாமும், ஊழியக்காரர்களும் ஜனங்களின் மேல் தங்களுடைய கரங்களை வைத்து ஜெபிக்கின்றனர். ஒலிநாடாவில் காலி இடம். ஆசி] நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய். 80இப்பொழுது நீங்கள் இதை இந்த வழியில், “இப்பொழுது நான் நம்புகிறேன், இப்பொழுது நான் அதை நம்புகிறேன்'' என்று பாட முடியுமா? நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்தி, ”நான் உண்மையிலேயே அதை நம்புகிறேன்'' என்று கூறுங்கள். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன''. யாவும் கைகூடிடும், இப்பொழுது நான் நம்புகிறேன்; ஓ, இப்பொழுது நான் நம்புகிறேன், இப்பொழுது நான் நம்புகிறேன், யாவும் கைகூடிடும், இப்பொழுது நான் நம்புகிறேன். 81சில நாட்களுக்கு முன்பு, சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஓரிரவு ஒரு மருத்துவமனையில் கடுமையான தொண்டை அழற்சி நோயினால் மரித்துக் கொண்டிருந்த ஒரு பையனிடத்திற்கு அழைக்கப்பட் டிருந்ததை நான் நினைவு கூருகிறேன். அங்கே ......... அவனுடைய இருதயம் மிகவும் மோசமாக இருந்தது. அந்த பையனுக்காக ஜெபிக்க என்னை அழைத்துச் செல்லும்படி அவனுடைய தகப்பனார் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்தப் பையன் சுமார் பதினைந்து, பதினாறு வயதுடையவனாய் இருந்தான். நானோ மிகவும் அலுவலாயிருந்தபடியால், என்னால் அதற்கு செல்ல முடியாமலிருந்தது. இறுதியாக ...... நீங்கள் ஒன்றை ஏற்றுக் கொண்டால் அப்பொழுது அது மற்றொன்றாய் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அந்த தகப்பனார் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்து அந்த நேரம் வரை காத்துக் கொண்டிருந்தார். முடிவிலே ஆராதனைக்கு பிறகு ஓர் இரவு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். நல்லது, நான் உள்ளே செல்ல முடியாது என்பதை மருத்துவர் என்னிடம் கூறினார். அவர், “ஏனென்றால் அந்த பையன் தொண்டை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறான். நீர் ஒரு திருமணமான மனிதனாயிருக்கிறபடியால் நீர் உள்ளே செல்ல முடியாது. ஏனெனில் அந்த கிருமியை உடன் கொண்டு வந்துவிடுவீர்'' என்றார். 82நல்லது, நான் அவரிடத்தில், “தயவு செய்து என்னை உள் ளே செல்ல சற்று அனுமதிப்பீர்களா?'' என்று கேட்டேன். அந்த மனிதன் கத்தோலிக்கனாய் இருந்தான். நான் சொன்னேன், நான், ”நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டேன். அவர், “நான் ஒரு கத்தோலிக்கன்” என்றார். நான், “ஒரு கத்தோலிக்க குரு இங்கே நின்று கொண்டு அந்த பையனுக்கு சபையின் வழிபாட்டு முறைகளை கடைசியாக செய்ய முயற்சிப்பாரானால், நீர் அதை ஏற்றுக் கொள்வீரா?'' என்று கேட்டேன். அவர், “அது வித்தியாசமானது. அது ஒரு கத்தோலிக்க குரு. நீரோ ஒரு திருமணமான மனிதன்” என்றார். நான், “எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள நான் ஒரு தாளில் கையெழுத்திடலாமா?” என்று கேட்டேன். அவர், “என்னால் அதைச் செய்ய முடியாது, ஐயா'' என்றார். நான், “தயவு கூறுங்கள்'' என்றேன், நான், ”ஒரு கத்தோலிக்க குரு உங்களுக்கு முக்கியமானவராயிருப்பது போன்றே நான் அந்த ஜனங்களுக்கு முக்கியமானவனாக உள்ளேன்'' என்று இதை கூறினேன். முடிவி லே, அவர் ஐக்கிய நாடுகளில் உள்ள தெற்கத்திய ஒரு இரகசிய அமைப்பு படைவீரர்களின் ஆடையைப் போல எனக்கு ஒரு ஆடையை உடுத்தி, முழுவதும் வெள்ளை நிறத்தால் என்னை உள்ளே கொண்டு சென்றார். நான் அந்தப் பையனிடம் சென்றேன். அவன் இரண்டு அல்லது மூன்று நாட்களாகவே சுயநினைவற்ற வனாக இருந்தான். அவனுடைய இருதயமோ வெறுமனே அடித்துக் கொண்டேயிருந்தது. நான் மூச்சு விடுதல் எப்படி இருந்தது என்பதை மறந்து விட்டேன்; மிகவும் குறைந்த அளவில் அப்படியே வெறுமனே இரத்தக் கசிவுடன் அடித்துக் கொண்டிருந்தது. அங்கே வயோதிப தகப்பனும் தாயும் நின்று கொண்டிருந்தனர். 83நான் அப்படியே கீழே முழங்காற்படியிட்டு, அவன் மீது கரங்களை வைத்து, வெறுமனே சாதாரணமான ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுத்தேன், நான், “கர்த்தராகிய இயேசுவே ....'' என்றேன். நான் வழக்கமாக இந்த வேத வாக்கியத்தை உபயோகிப்பேன். நீர், ”விசுவாசிக்கிறவர் களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்றீர். இதோ தகப்பனும் தாயும் இருக்கிறார்கள். அவர்கள் அதை விசுவாசிக்காமலிருந்தால், அந்த பையன் மீது கரங்களை வைக்கும்படி என்னை தொடர்ந்து பற்றிக் கொண்டு, விடாப் பிடியாய் இருக்கமாட்டார்கள். கர்த்தாவே, நான் ஒரு பரியாசத்திற்காக இங்கு வந்திருக்க மாட்டேன். நான் கூறினதும், போதித்திருப்பதும் சத்தியமாய் உள்ளது என்றே நான் விசுவாசிக்கிறேன். நானோ, ''நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சிறு பையனை ஆசீர்வதிக்கிறேன்; அவன் ஜீவிப்பானாக“ என்றேன். 84நான் எழும்பினபோது, வயோதிப தாயும், தகப்பனும் ஒருவரையொருவர் கட்டி தழுவி, “இது அற்புதமாயில்லையா, தாயே! இது அற்புதமாயில்லையா?” என்று கூறத் துவங்கினர். ஆனால் அந்தப் பையனோ கொஞ்சமும் மாற்றமடைய வில்லை; அப்படியே அங்கே படுத்திருந்தான். நான் - நான் அவர்களையே நோக்கிப் பார்த்தேன். அங்கே சிறு செவிலித்தாய் நின்று கொண்டிருந்தாள், அவள் ஒரு விசேஷித்த செவிலி தாயாயும், ஒரு பட்டதாரியாயும் இருந்தாள். அவள் அங்கிருந்து அந்தப் பையனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் அந்த தாயினிடத்தில் கூறினாள். அவள், “ உங்களுடைய பையன் மரித்துக் கொண்டிருப்பதை அறிந்தும், உங்களால் எப்படி இந்தவிதமாய் நடிக்க முடிகிறது?' என்று கேட்டாள். அந்த வயோதிப தகப்பனார், ஓ, நான் யூகிக்கிறேன், அவர் சுமார் ஐம்பத்தியெட்டு , அறுபது வயதுடையவரைப் போன்று இருந்தார். அவர் ஒரு வயோதிப தகப்பனாரைப் போன்று தன்னுடைய கரங்களை அவளுடைய தோள்களின் மீது வைத்தார். அவர், “குழந்தையே” என்று கூறி, அவர், “அந்தப் பையன் மரித்துக் கொண்டிருக்கவில்லை'' என்றார். அவரே கூறினார். அவள், “திருவாளரே'' என்றாள். அது என்ன வென்பதை நான் அறியேன். அது ஒருவிதமான இருதய துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம் அல்லது ஏதோ ஒன்று. மேலும் அவள், ”இந்த வியாதியினால் அவனுடைய - அவனுடைய மூச்சுவிடுதல் மிகவும் குறைந்து விட்டது. எனவே அந்த நிலைமையிலிருந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சரித்திரத்திலும் அறியப்படாத தாய் உள்ளது'' என்றாள். 85அந்த வயோதிப குடும்பத்தலைவர் தன்னுடைய கண்களை துடைத்து விட்டு, அவளை உற்றுப் பார்த்தார். நான் இதை ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். அவர், “தேனே, நீ ஒரு மருத்துவ விளக்க அட்டவணையை பார்த்துக் கொண்டிருக்கிறாய். அதை நோக்கிப் பார்க்கத்தான் நீ பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாய். ஆனால் நானோ தேவன் உண்டு பண்ணின ஒரு வாக்குத்தத்தத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது, 'அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்' என்பதாகும்'' என்றார். அந்தப் பையன் திருமணமாகி, மூன்று பிள்ளைகளைப் பெற்று ஆப்பிரிக்காவில் ஒரு ஊழியக்காரனாக இருக்கிறான். அது நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொறுத்ததாய் உள்ளது. இப்பொழுது சிலர் இங்கிருக்கலாம். அதாவது ஒரு ஜெப அட்டையை பெற்றுக் கொள்ளாமல் இங்கு வந்திருக்கலாம். நான் அங்கே கீழேயுள்ள மகனை கேட்டேன். அவன், “அப்பா, ஜெப அட்டையை பெற்றுக் கொள்ளாத அநேகர் அங்கே பின்னால் இருப்பதில் சந்தேகமேயில்லை'' என்றான். அப்படியானால், இங்கே எத்தனை பேர் விசுவாசிகளாய் இருக்கின்றீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நாங்கள், “இப்பொழுது நான் நம்புகிறேன்'' என்று பாடும் பொழுது நீங்கள் இதைச் செய்வீர்களா? இப்பொழுது தேவன் உங்களுக்கு நல்லவராகவே இருந்தார். உங்களுக்கு அப்படி இல்லையா? ஒரு விசுவாசி என்ற காரணத்தால் ....... அது ஒரு விசுவாசியாய் இருக்கின்ற வரையிலும், அது யாருடைய கர மாய் இருந்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. புரிகின்றதா? நீங்கள் அப்படியே கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். நாம், ”இப்பொழுது நான் நம்புகிறேன்'' என்ற இந்தப் பாடலை சேர்ந்து பாடலாம். நான் உங்களை சந்திக்கும் வரையில், தேவன் உங்களோடிருப்பாராக! இப்பொழுது நான் நம்புகிறேன். அது உண்மை . உங்களுடைய கரங்களை உங்களுக்கு அருகில் உள்ளவர் மேல் வையுங்கள். இப்பொழுது நான் நம்புகிறேன் யாவும் (என்ன தவறாய் இருந்தாலும் கவலையில்லை , யாவும் கைகூடிடும்) கூடிடு ... (இயேசுவின் நாமத்தில்!) இப்பொழுது நான் நம்புகிறேன், ஓ, இப்பொழுது ...... (இப்பொழுது நான் நச்சரித்துக் கொண்டிருக்க வில்லை. இல்லை, இது, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்) யாவும் கைகூடிடும், ஓ, இப்பொழுது நான் நம்புகிறேன் 86இப்பொழுது இதை விசுவாசிக்கிற யாவரும் இந்த வண்ணமாய் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “இப்பொழுது நான் இதை நம்புகிறேன்'' என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் சந்திக்கும் வரையிலுமே! ...... சந்திக்கும் வரையிலுமே நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரையிலுமே! நாம் சந்திக்கும் வரையிலுமே! நாம் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரையிலுமே நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! நம்முடைய தலைகள் இப்பொழுது வணங்கியிருக்கட்டும். நாம் ...... வரையில் தேவன் உங்களோடிருந்து, உண்மையாகவே, உங்களுக்கு முன்பாக அச்சுறுத்துகிற மரண அலைகளை அடித்து வீழ்த்தி, உங்களை ஜெயத்திலிருந்து ஜெயத்திற்கு கொண்டு செல்வாராக. என்றோ ஒரு நாள் நம்முடைய சரீரங்கள் மாற்றப்படும். அவருடைய சொந்த மகிமையான சரீரத்திற் கொப்பாய் மாற்றப்படும். அங்கே நாம் வியாதி ய ஸ் தருக்காக ஜெபிக்கவே மாட்டோம். அப்பொழுது வரை, நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக. (சகோதரன் பிரான்ஹாம் வாய் திறவாமல் மெளனமாக பாடுகிறார். - ஆசி.) நாம் சந்திக்கும் வரையிலுமே! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! இப் பொழுது நாம் முடிவான ஜெபத்திற்காக நம்முடைய தலைகைள் வணங்குவோமாக. யார் ஜெபிக்கப் போகிறது? (யாரோ ஒருவர், “சகோதரன் ஜிப்சன்'' என்கிறார். - ஆசி.) நாம் நம்முடைய தலைகளை வணங்கி யிருக்கையில், இப்பொழுது சகோதரன் ஜிப்சன்.